சுந்தர்.சி, ஜெய் திரையில் மோதும் 'பட்டாம்பூச்சி'

சுந்தர்.சி, ஜெய் திரையில் மோதும் 'பட்டாம்பூச்சி'

1 mins read
ea91ecdf-26a7-4dea-aab7-81521181b7d3
'பட்டாம்பூச்சி' படத்தில் ஜெய், சுந்தர்.சி. -

நடி­க­ரும் இயக்­கு­ந­ரு­மான சுந்­தர்.சி நாய­க­னாக நடித்­துள்ள 'பட்­டாம் பூச்சி' படம் ஜூன் 24ஆம் தேதி வெளி­யா­கிறது. இதை பத்ரி இயக்க, குஷ்பு தயா­ரித்­துள்­ளார்.

சைக்கோ, திகில் கதையை மைய­மா­கக் கொண்டு உரு­வா­கி­உள்­ளது இப்­ப­டம். இறு­திக்­கட்­டப் பணி­கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரும் நிலை­யில், இப்­ப­டம் ஜூன் 24ஆம் தேதி வெளி­யா­கும் எனப் படக்­கு­ழு­வி­னர் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­னர்.

முன்­ன­தாக இம்­மா­தம் 13ஆம் தேதியே இப்­ப­டம் திரை­கா­ணும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

முதன் முறை­யாக இந்­தப் படத்­தில் வில்­ல­னாக நடிக்­கி­றார் ஜெய். அவ­ரும் சுந்­தர்.சி.யும் மோதிக்­கொள்­ளும் காட்­சி­களில் திரை­யில் அனல் தெறிக்­கு­மாம். இந்­தப் படத்­தில் சுந்­தர்.சி காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­துள்­ள­தா­கத் தெரி­கிறது. ஜெய்­யின் வில்­லத்­த­னம் புது மாதி­ரி­யா­ன­தாக இருக்­கும் என்­றும் ரசி­கர்­களை நிச்­ச­யம் மிர­ள­வைக்­கும் என்­றும் இயக்­கு­நர் உத்­த­ர­வாதம் அளிக்­கி­றார்.