சிவம் ராஜாமணி இயக்கத்தில் விமல் நடிக்கும் படம் 'மஞ்சள் குடை'. இதில் அவரது இணையாக ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார்.
மேலும், எம்எஸ் பாஸ்கர், ரேணுகா, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"இது குடும்ப உணர்வுகளும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நிறைந்த படமாக இருக்கும். இன்றைய சூழலில் நடுத்தர மக்களின் பெரிய கனவாக இருப்பது சொந்த வீடுதான்.
"வாடகை வீட்டில் பல்வேறு கெடுபிடிகளை எதிர்நோக்கும் நடுத்தரக் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் விமல். எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்று விரும்புகிறார். குடும்பத்தாரும் ஒத்துழைத்து பணத்தைச் சேமிக்கத் தொடங்குகிறார்கள்.
"இதற்காக அந்தக் குடும்பம் படும்பாடும் இறுதியில் சொந்த வீடு வாங்கினார்களா என்பதுதான் கதை," என்கிறார் இயக்குநர் சிவம் ராஜாமணி.

