'தமிழர்கள் அன்பானவர்கள்'

'தமிழர்கள் அன்பானவர்கள்'

3 mins read
c27c2279-77d1-4be3-aabe-871d484ff00c
-

கொரோ­னா­வால் முடங்­கிக்­கி­டந்த தமிழ்த் திரை­யு­ல­கம் இப்­போது பர­ப­ரப்­பாக இயங்­கிக் கொண்­டி­ருக்­கிறது. இதை­ய­டுத்து ஏரா­ள­மான புது நாய­கி­கள் கோடம்­பாக்­கத்­துக்­குப் படை­யெ­டுத்த வண்­ணம் உள்­ள­னர்.

அந்­தப் பட்­டி­ய­லில் சங்­கீதா சிருங்­கே­ரி­யும் இணைந்­துள்­ளார். கர்­நா­ட­கா­வில் இருந்து தமி­ழுக்கு வந்­துள்ள மேலும் ஒரு கன்­ன­டத்­துப் பைங்­கிளி என்று சமூக ஊட­கங்­களில் இளை­யர்­கள் பல­ரும் குறிப்­பிட்டு, சங்­கீ­தா­வுக்கு வாழ்த்து கூறி வர­வேற்­றுள்­ள­னர்.

தாம் நடி­கை­யா­னது, மூன்று படங்­களில் நடித்து முடித்­தி­ருப்­பது, தமிழ்ப் படம் ஒன்­றில் ஒப்­பந்­த­மாகி உள்­ளது ஆகிய அனைத்­துமே கனவு போல் இருப்ப தாகச் சொல்­கி­றார் சங்­கீதா.

சங்­கீ­தா­வின் தந்தை சிவ­கு­மார் இந்­திய விமா­னப் படை­யில் பணி­யாற்­றி­ய­வர். தாயார் மருத்­து­வத்­துறை ஆலோ­ச­கர். சிருங்­கேரி என்­பது இவர் பிறந்த ஊராம். அத­னால் தன் பெய­ரு­டன் அதைச் சேர்த்­துக் கொண்­டுள்­ளார்.

"மற்­ற­படி பட்­டப்­ப­டிப்பை முடித்­து­விட்­டேன். சிறு வயது முதல் சமூக சேவை­யி­லும் விளை­யாட்­டி­லும் ஆர்­வம் அதி­கம். பள்­ளி­யில் படிக்­கும்­போது நிறைய பதக்­கங்­கள் பெற்­றி­ருக்­கி­றேன். 'என்­சிசி'யிலும் பங்­கேற்­றேன்.

"குழந்­தைப் பரு­வத்­தில் இருந்தே பெற்­றோர் எனக்கு அனைத்து வகை­யி­லும் ஆத­ர­வாக உள்­ள­னர். நான் எதைக் கேட்­டா­லும் மறுக்க மாட்­டார்­கள். அப்­ப­டித்­தான் தொலைக்­காட்­சித் தொட­ரில் நடிக்க வாய்ப்பு கிடைத்­த­போது, எனது ஆர்­வத்­தைப் புரிந்து கொண்டு அதற்­குப் பச்­சைக்­கொடி காட்­டி­னர். இப்­ப­டிப்­பட்ட தந்­தை­யும் தாயும் கிடைத்த வகை­யில் நான் மிகுந்த அதிர்ஷ்­ட­சாலி," என்­கி­றார் சங்­கீதா.

பொது­வாக விளம்­ப­ரப் படங்­களில் நடிக்­கத் தொடங்கி, அதன் மூலம் சின்­னத்­திரை வாய்ப்­பு­க­ளைப் பெற்று, அதன்­பி­றகு திரைத்­து­றை­யில் அறி­மு­கமா வார்­கள்.

பல நடி­கை­க­ளின் பாதை இது­வா­கத்­தான் இருக்­கும். ஆனால் சங்­கீதா விஷ­யத்­தில் எல்­லாமே நேர்­மா­றாக உள்­ளது. விளம்­ப­ரங்­களில் நடிக்­கும் முன்பே சின்­னத்­திரை தொடர் வாய்ப்பு தேடி­வந்­த­தாம்.

"கடந்த 2016ஆம் ஆண்டு கன்­ன­டத்­தில் உரு­வான 'ஹர­ஹர மஹா­தே­வகி' என்ற தொட­ரில் நடித்­துள்­ளார். அதன் பிறகு இரண்டு தெலுங்­குத் தொடர்­களில் நடித்­துக் கொண்­டி­ருந்­த­போது தான் '777 சார்லி' பட வாய்ப்பு கிடைத்­தது.

"அதன் பிறகு இந்­திப் படத்­தி­லும் நடித்­துள்­ளேன். இப்­போது தமி­ழில் நடிக்­க­வும் ஒப்­பந்­த­மா­னது மகிழ்ச்சி தரு­கிறது," என்று சொல்­லும் சங்­கீதா முன்­னணி இயக்­கு­ந­ரின் படத்­தில் நடிக்­கி­றார். இது தொடர்­பான அறி­விப்பு விரை­வில் படத்­த­யா­ரிப்­புத் தரப்­பால் வெளி­யி­டப்­ப­டு­மாம்.

இவர் அண்­மை­யில் பார்த்து ரசித்த படம் 'கர்­ணன்'. அதில் தனு­ஷின் நடிப்­பும் திரைக்­கதை அமைப்­பும் தம்மை மிக­வும் கவர்ந்­து­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"அது மட்­டு­மல்ல, சங்­கீ­தா­வுக்­குப் பிடித்­த­மான நடி­கர் தனுஷ். அவ­ரு­டன் இணைந்து நடிக்க விரும்­பு­கி­றார்.

சங்­கீதா ஓர் உடற்­ப­யிற்­சிப் பிரியை. எப்­போது நேரம் கிடைத்­தா­லும் பல­வி­த­மான உடற் பயிற்­சி­களை மேற்­கொள்­கி­றார். தந்தை விமா­னப்­படை அதி­காரி என்­ப­தால் அன்­றாட நட­வ­டிக்­கை­கள் எல்­லாம் அந்­தந்த நேரத்­துக்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்­ப­தில் கண்­டிப்­பாக இருப்­பா­ராம்.

"தமிழ் மக்­க­ளி­டம் எனக்கு மிக­வும் பிடித்­த­மான விஷ­யம் அவர்­கள் பிறர்க்கு அளிக்­கும் மரி­யாதை. நான் சென்­னைக்கு வந்­தது முதல் என்­னைச் சுற்றி உள்ள அனை­வ­ருமே கண்­ணி­ய­மா­க­வும் அக்­க­றை­யு­ட­னும் நடந்து கொள்­கி­றார்­கள்.

"தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான கலை­ஞர்­களை அவர்­கள் தாங்­கிப் பிடிக்­கி­றார்­கள்.

"ஒரு நல்ல படத்­தின் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளுக்கு விரை­வில் அறி­மு­க­மாக உள்­ளேன். அனை­வ­ரது ஆசி­யும் வாழ்த்­தும் எனக்­குத் தேவை," என்­கி­றார் சங்­கீதா சிருங்­கேரி.