திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
4cb1d41f-510d-4f8f-8428-45190da1465d
-
multi-img1 of 4

 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதையும் பி.வாசுதான் இயக்குகிறார். நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, இந்தக் கூட்டணியில் வடி வேலுவும் இணைந்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக் கிறது. இப்படத்தின் தலைப்புக் கான உரிமை சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தது. ஒரு கோடி ரூபாய் கொடுத்து அதைப் பெற்றுள்ளனர்.

 திடீர் நெஞ்சுவலி காரணமாக நடிகை தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதாகவும் தெரிகிறது. அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின் அவரது உடல் நலம் தேறி உள்ளது. தற்போது சொகுசு தங்குவிடுதி ஒன்றில் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

 மித்ரன் ஜவஹர் இயக் கத்தில் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தையும் அதே நாளில் வெளியிடத் திட்ட மிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால் நீண்ட இடைவெளிக் குப் பிறகு இருவரும் திரையில் மோதும் சூழல் உருவாகும்.

 ரஜினியின் 169வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி என்று கூறப்படுகிறது. அவர் இளம் வயது ரஜினியாக நடிக்க உள்ளாராம். அது மட்டுமல்ல, படத்தின் இயக்குநர் நெல்சன் கேட்டுக்கொண்ட தால் இந்தப் புதிய

படத்துக்காக ஒரு பாடலும் எழுத உள்ளாராம் சிவா. இதையடுத்து சமூக ஊடகங்களில் சிவா ரசிகர்கள் இந்தத் தகவலைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.