திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
10d6b51a-340a-4495-b5dc-cdc6a7b85fc1
-
multi-img1 of 3

 ரஜினியின் 169வது படத்துக்கான கதையை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இன்னும் எழுதி முடிக்கவில்லை என நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லே தெரிவித்துள்ளார். எனவே தாம் அந்தப் படத்தில் நடிப்பது இன்னும் உறுதியாக வில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "படத்தின் முதல் பாதி கதை மட்டுமே எழுதி முடிக்கப்பட்டுள்ளது. ரஜினி படம் என்பதால், தனது முழுக் கவனத்தையும் கதை எழுதுவதில் குவித்துள்ளார் நெல்சன். முழுக் கதையையும் எழுதி முடித்தபிறகே எந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதை அவர் முடிவு செய்வார்," என்று சொல்லும் ரெடின், தற்போது 'நாய் சேகர் ரிட்டன்ஸ்', 'காபி வித் காதல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 தமது பெயரில் இயங்கும் அறக்கட்டளை கல்வி உதவித்தொகைகள் வழங்குவதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்று நடிகர் சூரி கூறி உள்ளார். ரசிகர்கள் இந்த அறிவிப்பை நம்பி யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் மேல்படிப்புக்குப் பணம் இன்றித் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு நடிகர் சூரி கல்வி உதவித் தொகை வழங்குவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் சூரியோ, இது ஏமாற்று வேலை என்கிறார். "போலியான ஒரு தகவலைப் பரவவிட்டு, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகிறார்கள். இதுகுறித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்," என சூரி கூறியுள்ளார். மேலும், கல்வி போன்ற விஷயங்களுக்கு தாம் சத்தமின்றிச் செய்து வரும் உதவிகள் எப்போதும் போல் தொடரும் என்றும் சூரி தெரிவித்துள்ளார்.

 தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநர் களில் ஒருவரான சின்னா உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவர் நடிகை நந்திதாவின் தந்தையாவார். 69 வயதான சின்னா இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர். பாக்யராஜ் நடித்த பல படங்களுக்கு சின்னாதான் நடன இயக்குநர்.