'நான்கு ஆண்டுகளாக கதை எழுதினேன்'

'நான்கு ஆண்டுகளாக கதை எழுதினேன்'

1 mins read
621e0fc3-2bfb-4121-8344-42ed4045d097
'வள்ளி மயில்' படக்குழுவினர். -

'வள்ளி மயில்' படத்­துக்­கான கதையை எழுதி முடிக்க தமக்கு நான்கு ஆண்­டு­கள் தேவைப்­பட்­ட­தாக இயக்­கு­நர் சுசீந்­தி­ரன் கூறி­யுள்­ளார்.

இவ­ரது இயக்­கத்­தில் விஜய் ஆண்­டனி நடிக்­கும் படம் இது. அடி­த­டி­யும் நகைச்­சு­வை­யும் சரி­வி­கி­தத்­தில் இருக்­கு­மாறு இப்­படத்தை இயக்கி உள்­ளார் சுசீந்­தி­ரன்.

கதைக்­க­ளம் திண்­டுக்­கல் என்­ப­தால் அங்கு ஒரு கோடி ரூபாய் செல­வில் பிரம்­மாண்­ட­மான அரங்கு அமைத்து, படத்­தின் படப்­பி­டிப்பை நடத்தி உள்­ள­னர். சில முக்­கிய காட்­சி­களை டெல்­லி­யி­லும் சென்­னை­யி­லும் பட­மாக்க உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இந்­தப் படத்­தின் முதல்­தோற்­றச் சுவ­ரொட்டி நேற்று முன்­தி­னம் வெளி­யா­னது. இந்­நிகழ்­வில் பேசிய சுசீந்­தி­ரன், 'வள்ளி மயில்' படம் இந்­தி­யத் திரை­யு­ல­கில் முக்­கி­ய­மான இடத்­தைப் பிடிக்­கும் என்­றார்.

"சில படங்­க­ளைப் பார்க்­கும்­போது அவற்­றின் கதை­யோடு நம் வாழ்க்­கை­யை­யும் பொருத்­திப் பார்க்க முடி­யும். இத­னால் படத்­து­ட­னான நெருக்­கம் அதி­க­ரிக்­கும். இது­வும் அப்ப­டிப்­பட்ட படம்­தான்.

"படத்­துக்கு வலுசேர்க்­கும் அம்­ச­மாக டி.இமா­னின் இசை அமைந்­துள்­ளது. அவ­ரு­டன் ஒன்­பது படங்­களில் இணைந்து பணி­யாற்றி உள்ளேன். அவர் கடி­ன­மான உழைப்­பாளி. அவ­ரைப் போலவே இந்­தப் படத்­தில் பணி­யாற்­றிய அனை­வ­ரும் முழு அர்ப்­ப­ணிப்­பு­டன் உழைத்­த­னர்.

"இப்படத்­தின் கதையை நான்கு ஆண்­டு­க­ளாக எழுதி வந்­தேன். கதை­யைக் காட்­சிப்­ப­டுத்த கடும் உழைப்பு தேவைப்­பட்­டது. வள்ளி மயில் கதா­பாத்­தி­ரத்­தில் ஃபரியா நடிக்­கி­றார். அவர்தான் இந்தப்படத்­தின் உயிர். பல மொழி­களி­லும் ஒரே நேரத்­தில் படம் வெளியா­கிறது," என்கிறார் சுசீந்திரன்.