'சவால்களை ரசிக்கிறேன்'

'சவால்களை ரசிக்கிறேன்'

3 mins read
2183306f-5430-47fe-9a6d-25bb5fa65cb8
-

சவால்­க­ளைத் தாம் மிக­வும் நேசிப்­ப­தா­க­வும் சவால்­கள் இல்­லாத வாழ்க்கை போர­டித்­து­வி­டும் என்­றும் சொல்­கி­றார் நடிகை சாய் பல்­லவி.

பல்­வேறு மாறு­பட்ட கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கும்­போது எழக்­கூ­டிய சவால்­களை ஒரு நடி­கை­யாக தாம் மிக­வும் ரசிப்­ப­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நடிகை என்ற வகை­யில் எப்­போ­தும் ஒரு­வித அழுத்­தத்­து­டன் இருக்­கவே விரும்­பு­கி­றேன். அப்­போ­து­தான் நான் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மையை, அதன் வலியை என்­னால் உணர முடி­யும்.

"எனது முந்­தைய படங்­களில் இதைக் கவ­னித்­தி­ருப்­பீர்­கள். நான் நடித்­துள்ள சில கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு கவர்ச்சி, செயற்கை அழகு ஆகி­யவை தேவைப்­ப­ட­வில்லை. எல்­லாமே இயல்­பா­ன­தாக அமைந்­தி­ருக்­கும்," என்­கி­றார் சாய் பல்­லவி.

இவ்­வா­றான கதா­பாத்­தி­ரங்­களில் நடிப்­ப­தால் முன்­னணி கதா­நா­ய­கர்­க­ளு­டன் இணைந்து நடிப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் குறைந்­து­வி­டும் என்று சிலர் கூறு­வதை தம்­மால் ஏற்க இய­லாது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தாம் இது­வரை இணைந்து நடித்த எந்த கதா­நா­ய­க­னும் இது­கு­றித்து கேள்வி எழுப்­பி­ய­தில்லை என்­கி­றார்.

"என்­னைப் பொறுத்­த­வரை ரசி­கர்­க­ளின் ஆத­ர­வும் அன்­பும் மிக முக்­கி­யம். அவர்­க­ளின் அன்பை அனைத்­துக்­கும் மேலா­ன­தா­கக் கரு­து­கி­றேன்.

"அர்த்­த­முள்ள கதா­பாத்­தி­ரங்­களும் திரைப்­ப­டங்­க­ளும்­தான் என்­னு­டைய இலக்கு.

"சிவாஜி கணே­சன் என்ற மாபெ­ரும் நடி­கர் மறைந்து இத்­தனை ஆண்­டு­கள் கடந்­து­விட்ட போதி­லும் இன்­னும் ரசி­கர்­க­ளின் மன­தில் இடம்­பி­டித்­துள்­ளார். அவ­ரது படங்­கள் குறித்து இன்­ற­ள­வும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றேன்.

"அப்­ப­டிப்­பட்ட படைப்­பு­களில் எனது பங்­க­ளிப்­பும் இருக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

"சில இயக்­கு­நர்­களும் கதா­சி­ரி­யர்­களும் என்னை மன­தில் வைத்து சில கதை­களை எழு­தி­ய­தா­கச் சொல்­லும்­போது பெரு­மை­யாக உணர்­கி­றேன்.

"காலம் மாறிக்­கொண்டே இருக்­கிறது. அத­னால் சவா­லான முயற்­சி­களில் துணிச்­ச­லு­டன் ஈடு­ப­டு­கி­றேன்," என்று சொல்­லும் சாய் பல்­லவி, அடுத்து 'விராட பரு­வம்' தெலுங்குப் படத்­தின் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி உள்­ளா­ராம்.

உண்­மை­யா­க­வும் கட­மையை உணர்ந்­தும் செயல்­பட்­டால் வெற்றி நிச்­ச­யம் என்று குறிப்­பி­டு­ப­வர், அத்­த­கைய முயற்­சி­களை ரசி­கர்­கள் திறந்த மன­து­டன் வர­வேற்­பார்­கள் என்­கி­றார்.

அதே­ச­ம­யம் ரசி­கர்­க­ளின் போக்கு எப்­ப­டிப்­பட்­டது, அவர்­க­ளுக்கு எந்த மாதி­ரி­யான படங்­கள் பிடிக்­கும் என்­பதை மட்­டும் கணிக்­கவே இய­லாது என்று சொல்­லும் சாய் பல்­லவி, கலை­ஞர்­கள் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயல்­ப­டு­வ­தில் மட்­டும் கவ­னம் செலுத்­தி­னால் போதும் என அறி­வு­றுத்­து­கி­றார்.

இவ­ரது நடிப்­பில் தமி­ழில் அடுத்து வெளி­யா­கும் படம் 'கார்கி'.

"அரு­மை­யான கதை­யு­டன் உரு­வாகி வரு­கிறது இப்­ப­டம். என் மன­துக்கு நெருக்­க­மான கதை என­லாம். அனைத்­துத் தரப்பு ரசி­கர்­களும் பார்த்து ரசிக்க முடி­யும். கொரோனா நெருக்­கடி வேளை­யில்­தான் பட­மாக்­கி­னோம்.

"ராஜ்­கு­மார் பெரி­ய­சாமி இயக்­கத்­தில், கமல்­ஹா­சன் தயா­ரிப்­பில், சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் இணைந்து நடிக்­கி­றேன். தெலுங்­கி­லும் தமி­ழி­லும் சில கதை­க­ளைக் கேட்டு முடித்­துள்­ளேன். விரை­வில் அடுத்­த­டுத்த படங்­கள் குறித்த அறி­விப்­பு­கள் வெளி­யா­கும்," என்­கி­றார் சாய் பல்­லவி.

தாம் வன்­மு­றையை அறவே வெறுப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், வன்­முறை மூலம் சாதிக்க முடி­யும் எனத் தாம் நம்­ப­வில்லை என்­கி­றார்.

முடிந்­த­வரை யாரை­யும் எந்த வகை­யி­லும் காயப்­ப­டுத்­தா­மல் இருக்கவேண்­டும் என்­ப­து­தான் சாய் பல்­ல­வி­யின் கொள்கை.

"அண்­மை­யில் வெளி­யான 'தி காஷ்­மீர் ஃபைல்ஸ்' திரைப்­ப­டம் அங்­குள்ள பண்­டிட் இன மக்­கள் எவ்­வாறு கொல்­லப்­பட்­டார்­கள் என்­ப­தைக் காட்­டு­கிறது. அதை மத மோதல்­க­ளா­கப் பார்க்­கி­றோம்.

"என்­னைப் பொறுத்­த­வரை அனை­வ­ரும் முத­லில் மதங்­க­ளைக் கடந்து மனி­தர்­க­ளாக இருக்க வேண்­டும்,'' என்­கி­றார் சாய் பல்­லவி.

அவ­ரது இந்­தக் கருத்து சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது. அதே­ச­ம­யம் சாய் பல்­ல­விக்கு ஆத­ரவு, எதிர்ப்பு என இரண்­டும் கிளம்­பி­யுள்­ளது.

, :

  