'அதிர்ஷ்டம் தேடி வந்தது'

'அதிர்ஷ்டம் தேடி வந்தது'

3 mins read
d33a1e52-7940-4137-bcb4-c2ec2803f695
-

மற்ற துறை­க­ளைப் போல் திரைத்­து­றை­யி­லும் பல­வி­த­மான சிக்­கல்­கள், சவால்­கள் உள்­ள­போ­தி­லும், திறமை இருந்­தால் நிச்­ச­யம் சாதிக்­க­லாம் என்­கி­றார் கியாரா அத்வானி.

எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்­தித் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான இவ­ருக்கு திரைப்­ப­ய­ணத்­தின் தொடக்­கம் அவ்­வ­ளவு சிறப்­பாக அமை­ய­வில்லை.

கியாரா நடித்து 2014ஆம் ஆண்டு வெளி­யான 'ஃபஹ்லி' இந்­திப் படம் சொல்­லிக் கொள்­ளும்­ப­டி­யாக இல்லை. விமர்­சன, வசூல் ரீதி­யில் வெற்­றி ­பெ­றா­த­தால் மனம் உடைந்து போயி­ருக்­கி­றார்.

ஓர­ளவு பழ­கிய சில திரை­யு­லக நண்­பர்­கள்­தான் பல­வி­த­மா­கப் பேசி தன்­னம்­பிக்­கை­யூட்டி உள்­ள­னர்.

"வணி­கப் படங்­களில் நடிப்­பதோ, மிகப்­பெ­ரிய வெற்­றிப் படங்­களில் நடிப்­பதோ நமக்­கான வாய்ப்­பு­களைப் பெற்­றுத் தரு­வ­தில்லை. மாறாக, நன்­றாக நடிப்­ப­து­தான் நமக்­கான இடத்­தைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் என்று மூத்த கலை­ஞர்­கள் சிலர் கூறி­னர்.

"அவர்­கள் கூறிய வார்த்­தை­கள் வாழ்க்கை, தொழில் மீதான பிடிப்பை வலுப்­ப­டுத்­தின. முதல் தோல்­வியை பின்­னுக்­குத் தள்­ளி­விட்டு நடை­போட்­டேன்.

"இன்று நான் நடித்­துள்ள மூன்று படங்­கள் அடுத்­த­டுத்து வெளி­யாக வரி­சை­யில் காத்­துக்­கிடக்­கின்­றன," என்­கி­றார் கியாரா.

இது­வரை தாம் நடித்த படங்­களை தனிப்­பட்ட வகை­யில் ஆய்வு செய்து பார்த்­தால், தமது திறமை, துணிச்­சல் எனப் பல்­வேறு அம்­சங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தாக உண­ரத் தோன்­று­கிறது என்று குறிப்­பி­டு­ப­வர், தாம் எதை­யும் திட்­ட­மிட்­டுச் செய்­வ­தில்லை என்­கி­றார். அதே­ச­ம­யம் அதிர்ஷ்­ட­மும் தமக்கு கைகொ­டுத்­த­தாக நம்­பு­கி­றார்.

"நல்ல நடி­க­ராக இருந்­தால் மட்­டுமே நீங்­கள் இங்கு தாக்­குப்­பி­டிக்க முடி­யும். இப்­போது எனது படங்­க­ளைப் பின்­னோக்கி பார்த்­தால், எனது நடிப்­புக்­காக பல பாராட்­டு­கள் பெற்­றி­ருக்­கி­றேன். அவை அனைத்­துமே உண்­மை­யான பாராட்­டு­கள். போலி­க­ளை­யும் உண்­மை­யற்ற பாராட்­டு­க­ளை­யும் நான் அறவே பொருட்­படுத்­து­வது இல்லை.

"வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­கள், கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்து வரு­கின்­றன. இதற்கு நான் கார­ண­மல்ல. அனைத்து வாய்ப்­பு­க­ளுமே தன்­னால் தேடி வரு­கின்­றன.

"நான் ஏதோ கவ­ன­மா­கக் கதை­கேட்டு, என் அனு­ப­வத்தை வைத்து கதை­க­ளைத் தேர்வு செய்­வ­தாக நினைக்­கி­றீர்­கள் எனில், அந்த எண்­ணத்தை மாற்­றிக்கொள்­ளுங்­கள். உண்மை­யில் நான் ஆசீர்­வ­திக்­கப்­பட்­ட­வள். அத­னால்­தான் நான் முயற்சி செய்­யா­ம­லேயே நல்ல விஷ­யங்­கள் நடக்­கின்­றன," என்­கி­றார் கியாரா அத்­வானி.

'கபீர் சிங்', `குட் நியூஸ்', 'கில்ட்டி' என்று கியாரா நடிப்­பில் அடுத்­த­டுத்து வெளி­யான படங்­கள் அனைத்­தி­லுமே இவ­ரது நடிப்பு தனித்­தன்­மை­யு­டன் இருந்­த­தாக விமர்­ச­கர்­கள் பாராட்டி உள்­ள­னர்.

அந்­தப் பாராட்­டும் அதற்­காக தாம் கொட்­டிய உழைப்­பும்­தான் அடுத்­த­டுத்த வாய்ப்­பு­க­ளைப் பெற்­றுத் தந்­த­தா­கச் சொல்­கி­றார்.

கியாரா நடித்து முடித்­துள்ள இரண்டு இந்­திப் படங்­கள் ஜூன் 20, ஜூன் 24 ஆகிய தேதி­களில் அடுத்­தடுத்து வெளி­யா­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால் இரட்­டிப்பு மகிழ்ச்­சி­யில் உள்­ளார்.

"எனது நடிப்­புத் திற­மையை பெரி­தாக வெளிப்­படுத்த வேண்­டும் என்று நான் நினைத்­ததே இல்லை. சிறிய, பெரிய கதா­பாத்­தி­ரங்­கள் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். தவிர, எனது கதாபாத்திரத்துக்கும் கதாநாய­கனுக்கு இணை­யான முக்­கி­யத்­து­வம் கிடைக்க வேண்­டும் என்றும் ஒருபோதும் எதிர்­பார்த்­த­து் இல்லை.

"ஆனா­லும்­கூட எனது நடிப்பு பலரால் பாராட்­டப்­படு­கிறது. அதற்­காக என்னை நம்பி வாய்ப்­ப­ளித்த இயக்­கு­நர்­கள், தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்­கு­த்தான் நன்றி சொல்ல வேண்­டும் ," என்­கி­றார் கியாரா அத்­வானி.

தமிழ்த் திரை­யு­ல­கம் மட்­டு­மல்­லா­மல், ஒட்­டு­மொத்த தென்­னிந்­திய திரை­யு­ல­கி­லும் கவ­னம் செலுத்­தத் தொடங்கி உள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், தென்­னிந்தி­யா­வில் அண்­மைக்­கா­ல­மாக உரு­வாகி வரும் திரைப்­ப­டங்­கள் தம்மை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது என்­கி­றார்,

கோலி­வுட், டோலி­வுட்­டில் எனக்கு அதிக நண்­பர்­கள் கிடை­யாது என்று சொல்­லும் கியாரா, விரை­வில் அங்கு புதிய நண்­பர்­கள் அறி­மு­க­மா­வார்­கள் என நம்­பு­கி­றா­ராம். கார­ணம், தமி­ழில் நடிக்க புதுக் கதை­களை தொடர்ந்து கேட்டு வரு­கி­றா­ராம்.

மிக விரை­வில் தென்­னிந்­திய இளை­யர்­களின் தூக்­கம் கெட்­டுப்­போ­கும் என்­பது உறு­தி­­யா­கி­விட்­டது.