'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இதை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழில் சூர்யா ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதில் சூர்யா சிறிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது அக்ஷய்குமார் மடியில் தாம் சாய்ந்து படுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சூர்யா. மேலும், படப்பிடிப்பில் பங்கேற்ற ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்ததாகவும் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களின் அன்புக்காக, அவர்களை மகிழ்விப்பதற்காக உண்மையாக உழைப்பேன் என்கிறார் சமந்தா.
சமூக ஊடகங்கள் மூலம் தம்மை வசைபாடுபவர்கள் குறித்து தாம் கவலைப் படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"என்னை ஒருதரப்பினர் கேலி செய்கிறார்கள். அவதூறாகப் பேசுகிறார்கள். இப்படிப்பட்டவர்களால் எத்தனையோ இரவுகளை தூக்கமில்லாமல் கழித்துள்ளேன். ஒரு கட்டத்தில் செய்யாத தவறுக்காக விமர்சிப்பவர்களை நாம் ஏன் மதிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு ரசிகர்கள் பக்கம் என் கவனத்தை திருப்பினேன். என்னை நேசிக்கும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வஞ்சனையில்லாமல் உழைப்பேன்," என்கிறார் சமந்தா.
'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்' படங்களை இயக்கிய ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவக்கியுள்ளார். இம்முறை அவர் யோகி பாபுவை நாயகனாக்கி உள்ளார். இப்படத்திற்கு 'மெடிக்கல் மிராக்கல்' என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர். இதில், தர்ஷா குப்தா, மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சித்தார்த் மல்கோத்ரா வுடன் 'மிஷன் மஜ்னு', அமிதாப்பச்சனுடன் 'குட்பை', ரன்பீர் கபூருடன் 'அனிமல்' ஆகிய மூன்று இந்தி படங்களில் நடித்து வருகி றார் ராஷ்மிகா மந்தனா. மேலும் இரண்டு இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல். இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் தென் இந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். தென்னிந்திய மொழிப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக கூறினாலும், ராஷ்மிகாவின் கவனம் முழுக்க பாலிவுட் மீதுதான் பதிந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு 'ஜெயிலர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். அப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைப்பை அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளது.
ஒரு கத்தியில் இருந்து ரத்தம் சொட்டுவது போன்ற புகைப்படத்துடன் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தத் தலைப்பு குறித்த அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

