கல்லூரி மாணவராக நடிக்கத் தயங்கிய அருள்நிதி

2 mins read
a808cd71-bed2-426a-bb66-0bb5c7e47ac6
'டி பிளாக்' படத்தின் சுவரொட்டி. -

'டி பிளாக்' திரைப்­ப­டத்­தில் முறுக்கு மீசை­யு­ட­னும் மிரட்­டும் தோற்­றத்து­ட­னும் காட்­சி­ய­ளிக்­கி­றார் அருள்­நிதி. அது­மட்­டு­மல்ல, முதன்­மு­றை­யாக இதில் கல்­லூரி மாண­வ­ரா­க­வும் நடித்­துள்­ளார்.

விஜய்­கு­மார் ராஜேந்­தி­ரன் இயக்கி உள்ள படம் இது. திகில், நகைச்­சுவை எனப் பல்­வேறு அம்­சங்­கள் இருக்­கு­மாம்.

"தோற்­றத்தை சற்றே மாற்­றிக் கொண்­டேன். உடனே தெரிந்­த­வர்­கள், ரசி­கர்­கள் என்று பல­ரும் இதென்ன வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரம் என்று கேட்­கி­றார்­கள். நான் கமல் சார் அல்ல.

"படத்துக்குப் படம் என்னால் தோற்றத்தை மாற்ற இயலாது. ஏதோ முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன். எனக்கான பாத்திரம் மனநிறைவு அளித்ததால் முரட்டு மீசை வைக்க சம்மதித்தேன்.

"மேலும் 'கொம்­பன்' படத்­தின் கதையை முத­லில் எனக்­கு­த்தான் சொன்­னார் இயக்­கு­நர். ஆனால் அப்­போது இருந்த சூழ்­நி­லை­யில், அந்­தக் கதை­யில் நடிக்க முடிய வில்லை. ஆனால், படம் பார்க்­கும்­போது­தான் தெரிந்­தது. நிச்­ச­யம் இதில் கார்த்தி சார் தவிர வேறு யாரும் நடித்­தி­ருக்க முடி­யாது.

"சரி இப்­போ­தா­வது வித்­தி­யா­ச­மா­கக் காட்­சி­ய­ளிப்­போம் என முயற்சி­யைத் தொடங்கி உள்­ளேன். எனக்கு கிரா­மத்து தோற்­றம் பொருத்தமாக இருப்பதாக சிலர் சொன்ன பிறகே நிம்மதியாக உணர்ந்தேன்," என்கிறார் அருள்நிதி.

கல்லூரி மாணவராக நடிக்க முதலில் தயங்கினாராம். ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா எனும் அச்சமே இதற்குக் காரணம்.

"ஆனால் இயக்குநர் விடுவதாக இல்லை. அவர் கொடுத்த ஊக்கத்தால் உடல் எடையைக் குறைத்து, கல்லூரி மாணவரின் தோற்றத்துக்கு மாறினேன்.

"கதைக்­க­ளம் கோயம்­புத்­தூர். கல்­லூரி மாண­வி­க­ளுக்­கான விடு­தி­யில் நடக்­கும் திடுக்­கி­டும் சம்­ப­வங்­கள்­தான் கதை.

"இயக்­கு­ந­ரின் சகோ­தரி படித்த கல்­லூ­ரி­யில் நடந்த சில உண்­மைச் சம்­ப­வங்­களை எடுத்­துக் கொண்டு, மேலும் சில திகி­லான விஷ­யங்­க­ளை­யும் சேர்த்து திரைக்­க­தையை அமைத்­துள்­ளார்," என்­கி­றார் அருள்நிதி.