திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
7a659b87-61e4-4c3d-969a-d86041c7ddaa
-
multi-img1 of 3

 நடிகை கீர்த்தி சுரேஷ், திரையுலகில் சம்பாதிக்கும் பணத்தை நிலங்களில் முதலீடு செய்கிறார். தன்னுடன் நடிக்கும் நடிகைகளிடமும் இந்த யோசனையை சொல்லி வழிகாட்டுகிறார். ஒரு படத்தில் நடித்து முடித்த தும், அதில் பெற்ற சம்பளத்தின் ஒரு பகுதியை புதிதாக நிலம் வாங்க ஒதுக்கிவிடுகிறார். இதனால் பிழைக்கத் தெரிந்த நடிகை எனக் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் கீர்த்தியின் முதலீட்டு முயற்சியைப் பாராட்டுகிறார்கள்.

 விஜய் நடித்து வரும் புதுப்படத்தின் புகைப்படம் மூன்றாவது முறையாக கசிந்துள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர், சென்னையில் இருந்து படப்பிடிப்பை ஹைதரா பாத்துக்கு மாற்றச் சொல்லிவிட்டாராம். முன்னதாக தமிழ்த் திரையுலகத் தொழிலா ளர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டதால் சென்னையில் படப்பிடிப்பை நடத்துமாறு விஜய் கூறியிருந்தாராம்.

 'மாமனிதன்' படத்தில் தன்னுடன் இணைந்து, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்துள்ள காயத்ரி யின் திறமை தம்மை வியக்க வைத்துள்ளதாகச் சொல்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து அவருடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் சேதுபதி தெரிவித்துள்ளார். "பலர் நடிக்கத் தயங்கிய வேடத்தில் காயத்ரி துணிச்சலாக நடித்தார். அதுவும் ஒப்பனை போடாமல், உடல் எடையைக் கூட்டி நடித்திருப்பது பெரிய விஷயம். காயத்ரி அற்புதமான நடிகை. அவரது திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. அவருடன் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் அவருடன் நடிப்பேன்," என்கிறார் விஜய் சேதுபதி.

 வெங்கி அட்லுரி இயக்கும் 'வாத்தி' படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள பாடல் இளையர்களைக் குத்தாட்டம் போட வைக்குமாம்.