முகபாவங்கள் தந்த வாய்ப்பு

முகபாவங்கள் தந்த வாய்ப்பு

3 mins read
44cc9359-7e36-401e-969b-4acc59c1735a
-

இன்­றைய தேதி­யில் தமிழ் கதா­நா­ய­கி­களில் அதி­க­மான படங்களில் நடித்து வரு­ப­வர் பிரியா பவானி சங்­கர் என­லாம்.

நடிப்­பில் எந்­தக் குறை­யும் வைக்­கா­த­வர், படம் வெளி­யாகும் வரை தம்­மால் முடிந்த பங்­க­ளிப்பை தயக்­க­மின்­றித் தரக்­கூடி­ய­வர், அனை­வ­ரு­ட­னும் இயல்­பா­கப் பழ­கக்­கூ­டி­ய­வர் என்று கோடம்­பாக்­கத்­தில் நற்­பெ­யரை சம்­பா­தித்து வைத்­துள்­ளார் பிரியா.

"அனை­வ­ரை­யும் மதித்­துப் பேசிப் பழ­கும் குணம்­தான் 'யானை' படத்­தில் அவரை நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்ய நான் முடி­வெ­டுக்­கக் கார­ணம்," என்­கி­றார் இயக்­கு­நர் ஹரி.

அருண் விஜய் நாய­க­னாக நடிக்க, ஹரி இயக்கி உள்ள இந்­தப் படம் விரை­வில் திரை­காண உள்­ளது. இந்­நி­லையில், பிரியா மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் பணி­யாற்­றும் கதா­நாயகி என்று பாராட்­டுச் சான்­றி­தழ் வழங்கு­கி­றார் ஹரி.

"உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால், பிரி­யாவை கதா­நா­ய­கி­யாக பரி­சீ­லிக்­கவே இல்லை. இதற்கு முன்பு நான் இயக்­கி­யுள்ள படங்­களில் நடிகர், நடி­கை­யர் குறித்து அதி­கம் யோசிக்க மாட்­டேன். ஆனால் இம்­முறை 'யானை' படத்­துக்­காக சின்­னச்­சின்ன விஷ­யங்­க­ளிலும்­கூட அதிகம் மெனக்­கெட்­டுள்­ளேன்.

"மற்ற கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு உரி­ய­வர்­களை முன்பே முடிவு செய்­து­விட்­டா­லும், நாய­கியை மட்­டும் உறுதி செய்­ய­வில்லை. பல நடி­கை­க­ளைப் பரி­சீ­லித்த போதி­லும் எனக்கு மன­நி­றைவு ஏற்­ப­ட­வில்லை," என்­கி்­றார் இயக்­கு­நர் ஹரி.

அவர் வைத்­தி­ருந்த நாயகி­க­ளின் பட்­டி­ய­லில் பிரியா­வின் பெயர் இல்­லை­யாம். ஆனால் திடீ­ரென்று நிலைமை தலை­கீ­ழாக மாறி­உள்­ளது.

தன் படத்­துக்­கான நாயகியை ஹரி தேடிக்­கொண்­டி­ருந்த வேளை­யில்­தான் அருண் விஜய் நடித்த 'மாஃபியா' படம் வெளி­யா­னது.

உட­ன­டி­யாக அடுத்த படத்­தி­லும் இரு­வ­ரும் சேர்ந்து நடித்­தால் ரசி­கர்­களின் கவ­னத்தை அதிகம் கவர முடி­யாது எனக் கரு­தி­யுள்­ளார் இயக்­கு­நர் ஹரி.

"அந்­தச் சம­யத்­தில் நானும் எனது மனை­வி­யும் ஹைத­ரா­பாத்­துக்குச் சென்­றி­ருந்­தோம். அப்­போது விமான நிலை­யத்­தில் பிரி­யா­வைச் சந்தித்­தோம்.

"அவ­ரும் என் மனை­வி­யும் நீண்ட நேரம் பேசிக்கொண்­டி­ருந்­த­னர். பிரி­யா­வின் முக பாவங்­க­ளை­யும் உடல்மொழி­யை­யும் கவ­னித்­த­போது, எனது கதை­யின் நாய­கி­யான மலர் கதா­பாத்­தி­ரத்­துக்­குப் பொருத்­த­மாக இருப்­பார் என்று தோன்றியது.

"மேலும் இது மண் சார்ந்த கதை என்­ப­தால் அதற்­கேற்ற முக அமைப்­பும் பிரி­யா­வி­டம் இருப்­பதைக் கவ­னித்­தேன்.

"அதன் பிறகு அவ­ரி­டம் கதையை மேலோட்­ட­மா­கச் சொல்லி, அவ­ரும் ஒப்­புக்­கொண்டு படத்­தில் நடித்து வரு­கி­றார்.

"நடிப்­பைப் பொறுத்­த­வரை நூறு விழுக்காடு அல்ல, அதை­விட இரு மடங்கு நன்­றாக நடித்­துள்­ளார். படப்­பி­டிப்­பின்­போது அவ­ரி­டம் என்ன எதிர்­பார்க்­கி­றோம் என்­ப­தைப் புரிந்­து­கொண்டு நினைத்­த­தை­விட பல மடங்கு நன்­றாகச் செய்­தார்," என்று ஹரி­யின் பாராட்­டுப் பத்தி­ரம் சற்று நீள­மாக உள்­ளது.

சரி.. பிரியா என்ன சொல்­கி­றார்?

ஹரி போன்ற அனு­பவ இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் நடிக்­கும்­போது கிடைக்­கும் அனு­பவம் தனது திரைப்பய­ணத்­தில் மிக முக்கி­ய­மான ஒன்று என்­கி­றார் பிரியா.

"ஹரி சார் மிக சுறு­சு­றுப்­பாக இயங்கக்­கூ­டி­ய­வர். அவ­ரது வேகத்­துக்கு ஈடு­கொடுப்­பது கடி­னம். ஆனால் எப்­ப­டி­யாவது அதைச் சாதித்­து­விட்­டால் போதும். நம் நடிப்­பும் திற­மை­யும் தன்­னால் வெளிப்­பட்டு நமக்கு நல்ல பெய­ரைப் பெற்­றுத் தரும்," என்­கி­றார் பிரியா.

தற்­போது ஏழெட்­டுப் படங்­களில் நாயகி­யாக நடித்­துக்கொண்­டி­ருப்­ப­வர், நல்ல கதை­யும் கதா­பாத்­தி­ர­மும் அமை­ய­வில்லை என்­றால் எந்தத் தயக்­க­மும் இன்றி தேடி வரும் வாய்ப்­பு­களை உத­றி­வி­டு­வ­தா­கத் தக­வல்.

பிரியா பவானி சங்­கர் தற்­போது 'இந்தியன்-2', 'பத்து தல', 'திருச்சிற்றம்பலம்', 'ருத்ரன்', 'அகிலன்', 'குருதி ஆட்டம்' ஆகிய படங்­களில் நடித்­துக்கொண்­டி­ருக்­கி­றார். நாய­கியை மையப்­ப­டுத்­தும் கதை­களும் அவரைத் தேடி வரு­கின்­ற­ன­வாம்.

அண்­மை­யில் இவர் நாய­கி­யாக நடித்த 'பிளட் மணி' திரைப்­ப­டம் ஓடிடி தளத்­தில் வெளி­யா­னது.

"நல்ல படம் என்­றா­லும் பெரி­தா­கப் பேசப்­ப­ட­வில்லை என்ற வருத்­தம் உள்­ளது. சில சம­யங்­களில் நல்ல படைப்பு­களுக்­கும் கூட விளம்­ப­ரம் தேவைப்­படுகிறது," என்­கி­றார் பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கர்