துணிந்து சாதித்த ஆனந்தி

துணிந்து சாதித்த ஆனந்தி

3 mins read

திரு­ம­ணத்­துக்­குப் பிற­கும் 'கயல்' ஆனந்­திக்கு நல்ல வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன. ரக்­‌ஷிதா என்ற இயற்­பெ­ய­ரு­டன் திரை­யு­ல­கில் நடிக்க வந்­த­வ­ருக்கு ஆனந்தி என்ற புதிய பெய­ரைச் சூட்டி தனது படத்­தில் நாய­கி­யாக நடிக்க வைத்­தார் இயக்­கு­நர் பிரபு சால­மன்.

'பரி­யே­றும் பெரு­மாள்' படத்­தின் 'ஜோ', 'கமலி ஃப்ரம் நடுக்­கா­வேரி' படத்­தின் 'கமலி' எனப் புதுப்­புது கதா­பாத்­தி­ரங்­களும் அடை­யா­ளங்­களும் கிடைத்­தா­லும்­கூட 'கயல்' ஆனந்தி என்­று­தான் ரசி­கர்­கள் இவ­ரது பெய­ரைக் குறிப்­பி­டு­கி­றார்­கள்.

இதைப் பெரு­மை­யா­கக் கரு­து­வ­தா­கக் கூறும் ஆனந்தி, அனைத்து பாராட்­டு­களும் பிரபு சால­ம­னைத்­தான் போய்ச்­சேர வேண்­டும் என்­கி­றார்.

"'உங்­க­ளு­டைய பெற்­றோர் வைத்த பெயர் ஒரு சினிமா கதா­நா­ய­கி­யின் பெயர்­போல் உள்­ளது. ஆனால், நீங்­களோ தமிழ்நாட்டுப் பெண் போல் இருக்­கி­றீர்­கள். எனவே ஆனந்தி என உங்­களுக்குப் பெயர் வைக்­கி­றேன்' என்­றார் பிரபு சால­மன் சார்.

"என் பெயரை மாற்­றப்­போ­வ­தாக அவர் சொல்­லவே இல்லை. 'கயல்' படத்­தின் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போ­துதான் பெயர் மாற்­றப்­படும் விவ­ரத்தை தெரிந்து கொண்­டேன். அதில் எனக்குக் கொஞ்­சம் வருத்­தம்­தான்.

"என்­றா­லும் ரசி­கர்­கள் இன்­னும் 'கயல்' ஆனந்­தி­யா­கவே என்­னைப் பார்ப்­பது மகிழ்ச்சி தரு­கிறது. அதே­சமயம் கம­லி­யும் ஜோவும்­கூட என் மன­துக்கு மிக­வும் நெருக்­க­மா­ன­வர்­கள்­தான்," என்கிறார் ஆனந்தி.

திரு­ம­ண­மாகி ஒரு குழந்­தைக்­கு தாயா­கி­விட்டபோதிலும் ரசி­கர்­கள் சிலர் இன்­னும்­கூட இந்­தத் தக­வலை நம்­ப­ மறுக்கிறார்கள். அவ்­வப்­போது சமூக ஊட­கங்­களில், 'திரு­ம­ண­மா­கி­விட்­ட­தா­கப் பொய் சொல்­கி­றீர்­கள்' என்று பதி­வி­டு­வ­தைப் பார்க்க முடி­கிறது.

"கண­வ­ரின் பெயர் சாக்­ர­டீஸ் என்­ப­தால் என் மக­னுக்­கும் கிரேக்க தத்­துவ ஞானி­யான பிளாட்­டோ­வின் பெயரை வைக்க ஆசைப்­பட்­டார். 'பிளாட்டோ நன்­மா­றன்' என்று பெயர் சூட்­டி­யி­ருக்­கி­றோம்.

"எனக்­குத் திரு­ம­ண­மா­கி­விட்­டது என்­கிற உணர்வை கண­வர் வீட்­டார் அறவே கொடுக்­க­வில்லை. அந்த அள­வுக்கு அவர்­கள் குடும்­பத்­தில் ஒரு பெண்­ணாக அன்­பாக, பாச­மாக நடத்­து­கி­றார்­கள். எனது யோச­னை­களை மதிக்­கி­றார்­கள்.

"நானும் என்னை ஒரு நட்­சத்­தி­ரம் என்று எண்­ணிக் கொள்­வ­தில்லை. ரசி­கர்­களில் ஒருத்­தி­யைப்­போல் அவர்­கள் வீட்­டுப் பெண்­போல் இருக்­கவே விரும்­பு­கி­றேன்.

"எனக்­குத் திரு­ம­ணம் ஆகி­விட்­டது என்­பதை தமிழ், தெலுங்கு சினிமா இயக்­கு­நர்­களும் கூட நம்­பத் தயா­ராக இல்லை. எப்­போ­தும்­போல் எனக்கு சிறந்த கதா­பாத்­தி­ரங்­க­ளைக் கொடுத்­துக் கொண்­டே­யி­ருக்­கி­றார்­கள். இதற்கு கைமாறாக, அவர்­கள் என்­னி­டம் எதிர்­பார்க்­கும் கண்­ணி­யத்­தை­யும் நல்ல நடிப்­பை­யும் எனது கதா­பாத்­தி­ரங்­கள் வழி­யா­கக் கொடுத்­துக் கொண்டே இருக்க வேண்­டும் என்று நினைக்­கி­றேன்," என்­கி­றார் ஆனந்தி.

இவ­ரது நடிப்­பில் தமி­ழில் அண்­மை­யில் உரு­வான படம் 'டைட்­டா­னிக்'. முதன் முறை­யாக இதில் இடம்­பெற்றுள்ள ஒரு பாட­லுக்­காக குத்­தாட்­டம் போட்­டுள்­ளார்.

இயக்­கு­நர்­க­ளின் நாயகி என்று பெயர் வாங்­கிய நடிகை­களில் ஆனந்­தி­யும் ஒரு­வர்.

ஒரு நடி­கை­யாக வெவ்­வேறு இயக்­கு­நர்­க­ளின் இயக்கத்தில் நடிப்­பது நல்ல அனு­ப­வ­மாக இருக்­கும் என்­கி­றார்.

"இயக்­கு­நர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பெரி­தும் மாறு­படு­வர். இயக்­கு­நர் பிரபு சால­மன் தாம் விவ­ரித்த, எதிர்­பார்த்­த­ப­டியே ஒவ்­வொரு காட்­சி­யும் வர வேண்­டும் என்று நினைப்­பார்.

"நாம் வேறு மாதிரி நடிக்க முற்­பட்­டால், 'நான் உரு­வாக்­கிய 'கயல்' இப்­ப­டிச் செய்­ய­மாட்­டாள். அவள் இன்­னும் ரொம்­பக் கீழே இருக்கும் சாமா­னி­யப் பெண்' என்று சொல்­வார். அவ­ரைப் போன்­ற­வர்­க­ளி­டம் இயக்­கு­ந­ரின் நடி­கை­யாக இருந்­து­வி­டு­வதே சரி.

"இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் சார் இதற்கு நேரெ­திர். இந்­தக் கதா­பாத்­தி­ரத்தை மன­தில் எப்­ப­டிக் கற்­பனை செய்து வைத்­தி­ருக்­கி­றீர்­களோ, அப்­படியே வெளிப்­ப­டுத்­து­ங்­கள் என்­பார்.

"இப்­படி இயக்­கு­ந­ருக்கு இயக்­கு­நர் சில விஷயங்களில் நாம் மாறு­பட வேண்­டி­யி­ருக்­கும். இயக்­கு­ந­ரின் பாணி மட்­டுமே மாறு­ப­டு­கி­றதே தவிர, அவர்­க­ளி­டம் இருந்து நிச்­ச­யம் பல­வற்றை கற்­றுக்­கொள்ள முடி­யும். திரை­யு­ல­கில் அறி­மு­க­மான நாள் முதல் நான் இதைச் செய்து வருகி­றேன்," என­கி­றார் ஆனந்தி.

திரை­யு­ல­கில் சம்­பா­தித்­ததை வைத்து ஆனந்தி நகைக்­கடை திறந்­தி­ருப்­ப­தாக வெளி­யான தக­வ­லில் பாதி மட்­டுமே உண்­மை­யாம்.

"நான் நகைக்­கடை நடத்த வில்லை. என் தந்­தை­யின் கடை அது. நான் முத­லீடு மட்­டுமே செய்­கி­றேன். ஒரு கட்­டத்­தில் முத­லீடு போதும், படம் தயா­ரிக்­க­லாமா என்று அப்பா கேட்­டார். நான் வேண்டாம் என்று கூறி­விட்­டேன். தெரி­யாத துறை­யில் கால்­ப­திக்க விரும்­ப­வில்லை," என்­கி­றார் ஆனந்தி.

'கயல்' ஆனந்தி

, :

  