'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.
இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை விடு்த்து வந்தனர்.
இந்நிலையில், 'புதுப்பேட்டை-2', 'ஆயிரத்தில் ஒருவன்-2' ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து உருவாகும் என்றும் முதலில் 'புதுப்பேட்டை' வெளியாகும் என்றும் செல்வராகவன் அறிவித்துள்ளார்.
'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜயகாந்த் கௌரவ வேடத்தில் நடிப்பதாக இயக்குநர் விஜய் மில்டன் அறிவித்திருந்தார். எனினும் உடல்நல பாதிப்பால் விஜயகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். "எனினும் அவருடைய கதாபாத்திரம் முக்கியமானது. எனவே அவர் திரையில் தோன்றவில்லை என்றாலும், அவரது குரலை மட்டுமாவது பயன்படுத்துவோம் என்கிறார் விஜய் மில்டன்.

