ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிக்கும் பாடகர்

ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிக்கும் பாடகர்

1 mins read

ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் வாசிப்பதுதான் தமது முக்கிய பொழுதுபோக்கு என்கிறார் பாடகர் சித் ஸ்ரீராம்.

இல்லையெனில் திரைப் படங்கள் பார்ப்பாராம். சில படங்களை பலமுறை பார்ப்பது பிடிக்குமாம். அந்த வகையில் 'இருவர்' படத்தை ஒரே நாளில் இருமுறை பார்த்து ரசித்துள்ளார்.

சில சமயங்களில் கேமராவுடன் புறப்பட்டு வெளியே சென்று அழகான காட்சிகளைப் படம்பிடித்து வருவாராம்.

"பல பேட்டிகளில் எனது பொழுதுபோக்கு குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவைதான் இசைக்கும் அப்பால் என் நடவடிக்கைகள்," என்று அண்மைய கலந்துரையாட லின்போது சித் ஸ்ரீராம் கூறினார்.