'துணிந்து நடித்தேன்; வெற்றி அரவணைத்தது'

'துணிந்து நடித்தேன்; வெற்றி அரவணைத்தது'

2 mins read
12f7b531-ae08-41c2-b7d9-65e5015be68f
'ரெஜினா' படச்சுவரொட்டியில் சுனைனா. -

'ரெஜினா' மலை­யா­ளப் படத்­தின் மூலம் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்துள்­ளார் சுனைனா. அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட இப்­ப­டத்­தின் சுவ­ரொட்டி ரசி­கர்­களை திகி­ல­டைய வைத்­துள்­ளது.

தமி­ழில் விஷா­லு­டன் 'லத்தி' படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். மேலும், 'தொடு­வா­னம்' என்ற படத்­தில் நாற்­பது குழந்­தை­க­ளு­டன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து முடித்­தி­ருப்­ப­வர், நடி­கர் நானி­யின் சகோ­தரி இயக்­கி­யுள்ள 'மீட் க்யூட்' என்ற படத்­தின் வெளி­யீட்­டுக்­காக காத்­தி­ருக்­கி­றார்.

"இந்த ஆண்டு தமது நடிப்­பில் இரண்டு இணை­யத் தொடர்­களை எதிர்­பார்க்­க­லாம் என்று சொல்­லும் சுனைனா, அடுத்த ஆண்டு தொடக்­கம் வரை புதி­தாக யாருக்­கும் கால்­ஷீட் ஒதுக்க முடி­யாத நிலை­யில் உள்­ளா­ராம்.

"இணை­யத் தொடர்­கள் என்­றால் தகுதி குறை­வான விஷ­ய­மாக சிலர் நினைக்­கி­றார்­கள். திரைப்­படங்­க­ளுக்­கும் இந்­தத் தொடர்­களுக்­கும் இடையே பெரிய வித்­தி­யா­சமில்லை. படம் வெளி­யா­கும் தளங்­கள்­தான் வெவ்­வே­றா­னவை.

"மற்­ற­படி நமது படம் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் சென்­ற­டை­வதை எண்ணி மகி­ழ­லாம்," என்று சொல்­லும் சுனைனா கடந்த 2018ஆம் ஆண்­டி­லேயே இணை­யத்­தொ­டர்­களில் நடிக்­கத் தொடங்கி­விட்­டார்.

நண்­பர்­களும் நலன் விரும்­பி­களும் ஏன் தொடர்­களில் நடிக்கி றீர்கள் என்று கேட்கத் தொடங்கி விட்டார்களாம். தொலைக்­காட்சி, இணை­யத்­தொ­டர்­கள் ஆகிய இரண்­டும் வெவ்­வே­றா­னவை என்­பதை அனை­வ­ரும் விரை­வில் புரிந்­து­கொள்­வர் என்­கி­றார்.

`சில்­லுக்­க­ருப்­பட்டி' படம் வெளி­யான பிற­கு­தான் தமி­ழில் தமக்கு மீண்­டும் எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் அமை­வ­தா­கச் சொல்­ப­வர், மூன்று குழந்­தை­க­ளுக்குத் தாயாக நடித்­தால் சந்தை மதிப்பு போய்­வி­டும் என்று பல­ரும் எச்­ச­ரித்­த­தா­கக் கூறு­கி­றார்.

"இப்­ப­டிப்­பட்ட கதை­களில் நடிக்க வேண்­டாம். ஒரு குழந்­தைக்கு தாயாக நடித்­தாலே திரை­யு­ல­கம் ஒதுக்­கி­வி­டும் என்­றும் கூறி­னர். நான் என் முடிவை மாற்­றிக்­கொள்­வ­தாக இல்லை. வெற்­றியோ தோல்­வியோ துணிந்து நடித்தேன்.

"என் முடிவு தோற்­க­வில்லை, வெற்றி கிடைத்தது. மக்­கள் என்னுடைய கதாபாத்­தி­ரத்தை வெகு­வாக ரசித்­த­னர்.

"நான் பேசிய வச­னங்­க­ளுக்கு திரை­ய­ரங்­கில் பலர் எழுந்து நின்று கைதட்­டி­னர். விசில் சத்­தம் அதி­க­ரித்­த­போது, சுற்றி நடப்­ப­வற்றை என்­னா­லேயே நம்ப முடி­ய­வில்லை," என்று சொல்­லும் சுனைனா, 'லத்தி' படத்­தில் விஷா­லின் மனை­வி­யாக நடித்­துள்­ளார்.

ஒவ்­வொரு நாளும் படப்­பி­டிப்பு கல­க­லப்­பா­க­வும் உற்­சா­க­மா­க­வும் நடந்­த­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இந்­தப் படத்­தில் தமது கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பது சவா­லாக இருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"நான் அதி­கம் பேச­மாட்­டேன். ஆனால் 'லத்தி' படத்­தில் நான் ஓயா­மல் பேசிக்­கொண்­டி­ருக்­கும் நடுத்­த­ரக் குடும்­பத்­தைச் சேர்ந்த பெண்­ணாக நடித்­தேன்.

"குறை­வான வச­னங்­கள்தான், பல காட்­சி­களில் முக பாக­வங்­கள் மூல­மா­கவே ரசி­கர்­க­ளுக்கு சில­வற்­றைப் புரிய வைப்­பது சவா­லாக இருந்­தது," என்­கி­றார் சுனைனா.