என் பெயரில் 'ஐயர்' இருக்காது

என் பெயரில் 'ஐயர்' இருக்காது

1 mins read
d48164cc-04e3-440d-99b7-67f11065e6ef
-

பாலா­வின் 'அவன் இவன்' படத்­தின் மூலம் நாய­கி­யாக அறி­மு­க­மானவர் ஜனனி ஐயர். இந்தப் படத்தைத் தொடர்ந்து 'பாகன்', 'தெகிடி', 'அதே கண்கள்' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது இவர் நடித்திருக்கும் படம் 'வேழம்'. இந்­தப் படத்­தில் அசோக் செல்­வ­னு­டன் நடித்­தி­ருந்­தார்.

அந்­தப் படத்­தின் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்பு சென்­னை­யில் நடை­பெற்­றது. நாய­கன் அசோக் செல்­வ­னுக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­ட­தால் அவர் இதில் பங்­கேற்­காத நிலை­யில் ஜனனி ஐயர், ஐஸ்­வர்யா மேனன், இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர்­கள் என பல­ரும் பங்­கேற்­ற­னர்.

நிகழ்ச்­சி­யில் பேசிய ஜனனி ஐயர், "தெகிடி', 'வேழம்' என தலைப்­பு­கள் வித்­தி­யா­ச­மாக இருக்­கின்­றன.

"நல்ல திரைப்­ப­டங்­களை ஆத­ரிக்க தமிழ்த் திரை­யில் ஆட்­கள் குறை­வாக உள்­ள­னர். இருந்தும் 'வேழம்' படத்தை வெளி­யிட எஸ்பி சினிமா சார்­பில் கிஷோர் முன்­

வந்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.

"நான் என் பெய­ரில் இருக்கும் ஐயர் என்ற வார்த்­தையை நீக்­கி­விட்டேன். இனி­மேல் அனை­வ­ரும் என்னை 'ஜனனி' என்று அழைக்­க­வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.