நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்தனர். அதையடுத்து நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் ஒன்றாக இருப்பதாகவும் அவரையே இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும்
செய்திகள் வலைத்தளங்களில் வலம் வந்தன.
இதற்கு சமந்தாதான் காரணம். அவர்தான் நாக சைதன்யாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் செய்திகளைப் பரப்புகிறார் என்று நாக சைதன்யாவின் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து சமந்தா தனது டுவிட்டரில் "பெண் குறித்து வதந்திகள் வந்தால் அது உண்மை. ஆண் குறித்து வதந்திகள் வந்தால், அதை ஒரு பெண்தான் பரப்புகிறாள் என்று சொல்வதெல்லாம் என்ன நியாயம்? சம்பந்தப்பட்ட நாங்களே எல்லாவற்றையும் மறந்து அவரவர் வேறு வேறு பாதைகளில் சென்று கொண்டிருக்கிறோம்.
"நீங்களும் இதை மறந்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.

