திரைத்துளிகள்

கிரண்ராஜ் இயக்கத்தில், ரஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி ஆகியோருடன் நாய் சார்லி நடித்திருக்கும் கன்னடப் படம் ‘777 சார்லி’. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மறுபதிப்பு செய்துள்ளனர். இந்தப் படத்தில் நடிக்கும் நாய் சார்லி அற்புதமாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் நாயகனைப் பாராட்டியிருக்கிறார்.

தமிழ்த் திரையில் பிரபலமான பின்னணிப் பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரைகளில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014ஆம் ஆண்டு நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு ஆண்டு ஆகியுள்ளன. இந்நிலையில் சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!