சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்கிறார் வரலட்சுமி.
சிலர் வம்பிழுக்க வேண்டும் என்பதற்காகவே சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள் என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் ராதிகாவை ஏன் அம்மா என்று அழைப்பதில்லை என்று சிலர் கேட்கிறர்கள். அவர் எனது தந்தையின் இரண்டாவது மனைவி, அவ்வளவுதான். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அதற்காக நான் அவரை அம்மா என்று குறிப்பிட வேண்டிய அவசியம் எழவில்லை.
"என்னைப் பெற்றெடுத்த அம்மாவைத்தான் நான் அம்மா என்று கூப்பிட முடியும். ஒருவருக்கு ஒரு அம்மா மட்டுமே இருக்க முடியும்," என்கிறார் வரலட்சுமி.
தமக்கும் ராதிகாவுக்கும் இடையே மோதல் இருப்பதாக வெளியான தகவலும் பொய் என்கிறார்.

