மாற்றுத்திறனாளியும் பாடகருமான திருமூர்த்திக்கு தமது படத்தில் பாட வாய்ப்பு தரப் போகிறாராம் கமல்.
கண் பார்வையற்ற திருமூர்த்திக்கு முறையாக இசைப் பயில வேண்டும் என்று ஆசை. ஆனால், இதற்காக யாரை அணுகுவது, எவ்வாறு உதவி கேட்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்.
இந்நிலையில் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'பத்தல பத்தல' பாடலால் கவரப்பட்ட திருமூர்த்தி, அதை தாமே பாடி, சமூக ஊடகங்களில் அதை காணொளியாகவும் வெளியிட்டிருந்தார்.
அவரை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல் பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இசைப் பயிற்சி மையத்தில் திருமூர்த்திக்கு இடமும் பெற்றுத் தந்துள்ளார். அவரது பயிற்சிக் கட்டணத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், வரிசையாகப் பல்வேறு படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ள கமல், அவற்றுள் ஒரு படத்தில் திருமூர்த்தியை பாட வைக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்.
கண்பார்வையற்ற பாடகர் திருமூர்த்தியுடன் கமல்ஹாசன்.

