இளையராஜாவுடன் இணையும் வெங்கட் பிரபு

இளையராஜாவுடன் இணையும் வெங்கட் பிரபு

1 mins read

முதன்முறையாக தனது பெரியப்பா இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் வெங்கட்பிரபு.

இதன் மூலம் தமது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு. இதற்கு இளையராஜாவும் யுவன் சங்கரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

"ஆஸ்கருக்கு இணையான இந்த வாய்ப்புக்கு நன்றி ராஜா அப்பா. இது எனது வாழ்நாள் சாதனை," என்று வெங்கட் பிரபு மேலும் கூறியுள்ளார்.