திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
eff8d6d9-c657-4e06-9b74-36430ed33ad6
-
multi-img1 of 3

 'கேஜிஎஃப்' படத்தின் மூன்றாம் பாகத்தில் பங்கேற்பது தொடர்பில் போலிவுட் கலைஞர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பல முன்னணி நடிகர், நடிகைகள் 'கேஜிஎஃப்' தயாரிப்பாளரை யும் இயக்குநரையும் தொடர்பு கொண்டு தங்களுக்கும் சிறிய கதாபாத்திரத்தை யேனும் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்ப தாகத் தகவல். ஆலியா பட், தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் என வாய்ப்புக்காக தூதுவிட்டவர்களின் பட்டியல் நீளமாக உள்ளது. அனைவரும் நாயகன் யாஷுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மூன்றாம் பாகத்துக்கான முதல்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ள இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், யார் கதாநாயகி என்பதை முன்பே தீர்மானித்துவிட்டதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியிடுவார் என கூறப்படுகிறது.

 'பீஸ்ட்' படத்தில் நடித்தபோது தனது உதவியாளர்களுக்கு அதிக வசதிகளை செய்து கொடுத்து, தயாரிப்புத் தரப்புக்கு கூடுதல் செலவு களை ஏற்படுத்தியதாக பூஜா ஹெக்டே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் செலவுக்கான தொகையை திருப்பிச் செலுத்துவதாக பூஜா கூறியுள்ளதாகத் தகவல். படப்பிடிப்பின்போது பூஜாவுடன் சிகையலங்கார நிபுணர், ஒப்பனைக்கலைஞர், ஆடை வடிவைப்பாளர் என குறைந்தபட்சம் பத்து பேர் வந்ததாகவும் அனைவரும் தயாரிப்பாளர் செலவில் தங்கு விடுதியில் தங்கியதாகவும் கூறப்படுகிறது, அவர்களுடைய உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவுகள் என தயாரிப்பாளருக்கு சில லட்சங்கள் கூடுதல் செலவு ஏற்பட்டதாம். இதையடுத்து தயாரிப்புத் தரப்பில் இருந்து பூஜாவை தொடர்பு கொண்டபோது, அந்தத் தொகையை தாம் திருப்பித்தருவதாக அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

 சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார் அனிருத். தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'தாய் கிழவி' என்ற பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில், தனுஷ் நடித்துள்ள படம் என்பதால் இப்பாடலை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.