திரைத் துளி­கள்

 திருப்பூர் பனியன் தொழிற்சாலையின்

பின்னணியில் தமிழில்

ஏற்கெனவே சில தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் 'குதூகலம்' என்ற படமும் திருப்பூரைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகிறது.

இதில் பாலமுருகன் நாயகனாக அறிமுகமாக, அம்மு அபிராமி ஒப்பந்தமாகி உள்ளார்.

"தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற துடிக்கும் மகன் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கிறான்.

அவற்றை மீறி சாதித்தானா என்பதுதான் கதை. இதை திருப்பூரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில் நகைச்சுவையுடன் விவரிக்கிறோம்," என்கிறார் இயக்குநர் உலகநாதன்.

 பிரபுதேவா நடித்துள்ள 'மைடியர் பூதம்' திரைப்படம் ஜூலையில் வெளியீடு காண உள்ளது. ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.

சிறார் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் வகையில் உருவாகி உள்ள இப்படத்தை ராகவன் இயக்கியுள்ளார். அஷ்வத், பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா ஆகிய ஐந்து குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முழுக்க கற்பனைக் கதையைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு தணிக்கைக்குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.

 'விக்ரம்' படத்தின் வசூல் ரூ.400 கோடியைக் கடந்துள்ளது. மிக விரைவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், பட வசூல் மேலும் அதிகரிக்கும் என தயாரிப்புத் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சம்பளம் உயர்ந்துள்ளது.

 ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார் பாவனா. 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' என்ற மலையாளப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் பங்கேற்ற

அவருக்கு படக்குழுவினர்

உற்சாக வரவேற்பு அளித்த னர். சொந்தக் காரணங்களால் அவர் நடிக்காமல் இருந்தார். படக் குழுவின் வரவேற்பு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக கூறுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!