முதல் மனைவி லலிதா: நல்ல தந்தையாக நடந்துகொள்கிறார் பிரகாஷ்ராஜ்

விவா­க­ரத்­துக்­குப் பிறகு தமது குழந்­தை­க­ளுக்கு நடி­கர் பிர­காஷ்­ராஜ் நல்ல தந்­தை­யாக உள்­ளார் என்­றும் குழந்­தை­க­ளுக்கு எந்­த­வித குறை­யும் வைக்­க­வில்லை என்றும் கூறு­கிறார் லலி­தா­கு­மாரி.

பிர­காஷ்­ராஜ், லலி­தா­கு­மாரி தம்பதி­யர்க்கு மூன்று குழந்­தை­கள். அவர்­களில் ஐந்து வயது மகன் விபத்­தில் இறந்தார். அதன் பின்னர் இரு மகள்­க­ளின் மீதும் மிகுந்த பாசம் காட்டி வந்­தார்.

இந்­நி­லை­யில் கடந்த 2010ஆம் ஆண்டு லலி­தா­கு­ம­ரியை விவா­கரத்து செய்­தார் பிர­காஷ்­ராஜ். இரு­வருக்­கும் இடையே கருத்து வேறு­பா­டு­கள் அதி­க­ரித்து வரு­வ­தாக விளக்­க­மும் அளித்­தார்.

பின்­னர், இந்தி திரை­யு­ல­கில் பணி­யாற்றி வந்த நடன இயக்­கு­நர் போனி வர்­மா­வுக்­கும் பிர­காஷ்­ராஜுவுக்கும் திரு­ம­ணம் நடந்தது.

இந்­நி­லை­யில், பேட்டி ஒன்­றில் தனது முதல் மனைவி குறித்­தும் அவ­ரு­ட­னான விவா­க­ரத்து பற்­றியும் மனம் திறந்து பேசி­யுள்­ளார் பிரகாஷ்­ராஜ்.

“என் மனைவி லலி­தா­கு­மா­ரிக்­கும் எனக்­கும் இடையே சில பிரச்சினை­கள் இருந்­தன. அத­னால் நீதி­மன்­றத்தை அணுகி முறைப்­படி விவா­க­ரத்து பெற்­றுள்­ளோம்.

“எனி­னும் நான் என் மனைவியை மட்­டுமே விவா­க­ரத்து செய்­தேன். என் குழந்­தை­க­ளின் தாய்க்கு விவா­க­ரத்து தர­வில்லை. அதே­போல் எனது தாயா­ரும் மரு­ம­களை விவா­க­ரத்து செய்­யச் சொல்­ல­வில்லை,” என்று பிர­காஷ்­ராஜ் கூறி­உள்­ளார்.

அவ­ரது இந்­தப் பேட்டி லலி­தா­கு­மா­ரியை நெகிழ வைத்­துள்­ளது. அண்­மைய பேட்­டி­யில் அவ­ரும் தன் முன்­னாள் கண­வ­ரைப் பாராட்டி உள்­ளார்.

“இரு­வ­ரும் பிரிந்து வாழ்­கி­றோம் என்­றா­லும் குழந்­தை­க­ளின் நல­னில் எந்­தக் குறை­யும் ஏற்­ப­டா­மல் பார்த்­துக்­கொள்­கி­றோம். எங்­க­ளு­டைய குழந்­தை­க­ளுக்கு நாங்­கள்­தான் அப்பா, அம்மா என்­ப­தில் தெளி­வாக இருந்­தோம். இப்­போது வரை குழந்­தை­களை அவர் நன்­றா­கத்­தான் பார்த்­துக்கொள்­கி­றார்.

“குழந்­தை­கள் விஷ­யத்­தில் எது நடந்­தா­லும் இரு­வ­ரும் பகிர்ந்து கொள்ள வேண்­டு­மென்று பேசிக்­கொண்­டோம். அதன்­ப­டியே நடந்து கொள்­கி­றோம்,” என்று சொல்­லும் லலி­தா­கு­மாரி, பிர­பல நடிகை டிஸ்கோ சாந்­தி­யின் தங்­கை­யா­வார்.

கே.பாலச்­சந்­தர் இயக்­கிய ‘மனதில் உறுதி வேண்­டும்’, ‘புதுப்புது அர்த்­தங்­கள்’, ‘புலன் விசா­ரணை’ உள்­ளிட்ட பல படங்­களில் நகைச்­சுவை, குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ளார்.

அச்­ச­ம­யம் பிர­காஷ்­ரா­ஜு­டன் காதல் மலர்ந்­தது, அது திரு­மணத்தில் முடிந்­தது. அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டார் லலிதா குமாரி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!