சேதுபதியைப் புகழும் சங்கர்

சேதுபதியைப் புகழும் சங்கர்

1 mins read

'மாமனிதன்' படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பைக் கண்டு தாம் வியந்து போனதாகச் சொல்கிறார் இயக்குநர் சங்கர்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சேதுபதியின் நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு நல்ல படம் பார்த்த மனநிறைவை 'மாமனிதன்' கொடுக்கிறது. சீனு ராமசாமியின் ஆத்மார்த்தமான பங்களிப்பு மூலம் இது யதார்த்தமாக உருவாகி உள்ளது.

"விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம்," என்று சங்கர் பாராட்டி உள்ளார்.