'முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான முனீஸ்காந்த் முதன்முறையாக நாயகனாக நடிக்கிறார்.
'மிடில் கிளாஸ்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில், அவரது ஜோடியாக விஜயலட்சுமி ஒப்பந்தமாகி உள்ளார்.
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.
"நல்ல கதை என்பதாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதாலும் இப்படத்தில் நடிக்கிறேன்," என்கிறார் முனீஸ்காந்த்.

