‘உருவத்தைப் பார்க்காதீர்கள்; திறமையைப் பாருங்கள்’

அபர்ணா பால­மு­ரளி நடித்து அண்­மை­யில் வெளி­யாகி இருக்­கும் படம் 'வீட்ல விசே­ஷங்க'. இந்­தப் படத்­தில் அபர்­ணா­வின் உரு­வத்­தைப் பார்த்து பலர் வலைத்­

த­ளங்­களில் அவ­ரைக் கேலி செய்து பதி­விட்டு வரு­கி­றார்­கள். அத­னால் தான் மன உளைச்­ச­லுக்கு ஆளா­ன­தாக காணொளி ஒன்றை வெளி­யிட்டு இருக்­கி­றார் அபர்ணா பால­மு­ரளி.

மலை­யா­ளத்­தில் பல படங்­களில் நடித்­தி­ருந்த அபர்ணா பால­மு­ரளி முதன் முத­லில் தமி­ழில் 'எட்டு தோட்­டாக்­கள்' படத்­தில் நடித்­தி­ருந்­தார். அத­னைத்­தொ­டர்ந்து 'சர்­வம் தாள மையம்' படத்­தி­லும் நடித்­தார். ஆனால் இந்­தப் படங்­கள் அவ­ருக்கு நல்ல ஓர் அடை­யா­ளத்­தைப் பெற்­றுத் தர­வில்லை.

அதன்­பி­றகு மலை­யா­ளத்­தில் நடிக்க வாய்ப்­பு­கள் அவ­ருக்கு அதி­க­ரித்து வந்­த­தால் தமி­ழில் நடிக்­கா­மல் இருந்­தார்.

இந்­நி­லை­யில் இவர் சூர்­யா­வு­டன் இணைந்து நடித்த 'சூர­ரைப்­போற்று' திரைப்­ப­டம் வெற்­றிப்­ப­ட­மா­னது. அந்­தப் படத்­தில் இவ­ரது கதா­பாத்­தி­ரம் பெரு­ம­ளவு பேசப்­பட்­டது. அந்­தப் படத்­தில் இருந்து இவர் தமி­ழில் நல்ல படங்­க­ளுக்­காக காத்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் இவர் நடித்து அண்­மை­யில் வெளி­யான 'வீட்ல விசே­ஷம்' படத்­தில் ஆர்.ஜே.பாலா­ஜிக்கு ஜோடி­யாக நடித்­தி­ருந்­தார். இந்­தப் படத்­தில் முன்பு பார்த்­த­தை­விட இன்­னும் உடல் எடை கூடி இருந்­தது தெரிந்­தது.

அந்­தப் படத்­தைப் பார்த்­த­பி­றகு வலைத்­த­ளங்­களில், "பார்ப்­ப­தற்கு ஆன்ட்­டி­போல் அசிங்­க­மாக இருக்­கி­றீர்­கள்," என்று பலர் பதி­விட்­டி­ருந்­தது தன்னை மிக­வும் பாதித்­த­தா­க­வும் அத­னால் தான் மன உளைச்­ச­லில் இருப்­ப­தா­க­வும் காணொளி ஒன்றை வெளி­யிட்டு இருக்­கி­றார்.

அதில், "ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் முகம் பார்த்­துக்கொள்­ளா­மல் இணை­யங்­களில் இணைந்­தி­ருக்­கும் இந்த கால­கட்­டத்­தில் மன­தைப் புண்­ப­டுத்­தும்­ப­டி­யான பதி­வு­கள் வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­பட்டு வரு­வது தன்னை மிக­வும் காயப்­ப­டுத்­து­கிறது.

"இந்த மாதி­ரி­யான பகிர்­வு­கள் எந்த அள­விற்கு பாதிப்பை எங்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தும் என்­பதை உண­ரா­ம­லேயே அவர்­கள் இத­னைச் செய்து வரு­கின்­ற­னர்.

"உரு­வத்­தைப் பார்க்­கா­தீர்­கள். அவர்­க­ளி­டம் இருக்­கும் திற­மை­யைப் பாருங்­கள். நன்­றா­கப் பாடத் தெரி­யும். இசை அமைக்­கத் தெரி­யும். அத்­து­டன் நடிக்­க­வும் நடிக்­கி­றேன். இவற்­றை­யெல்­லாம் பார்க்­கா­மல் உரு­வத்­தைப் பற்­றியே கேலி செய்­கி­றீர்­கள்.

"உடல் எடை அதி­க­மாகிவிட்­டால் அதைக் குறைப்­ப­தற்கு அதைப்­பற்றி நாம் யோசிப்­ப­தற்­கு­கூட இடம் கொடுக்­கா­மல், நம்­மைக் குறி வைத்து நம்­மைப் பற்­றியே செய்­தி­கள் உலா வரு­கின்­றன. அது மிக­வும் மன­வே­த­னை­யைத் தரு­கிறது," என்று வருத்­தத்­து­டன் காணொளி ஒன்றை வெளி­யிட்டு இருக்­கி­றார் அபர்ணா பால­மு­ரளி.

நடிகை அபர்ணா பால­மு­ரளி நடித்­தி­ருக்­கும் 'வீட்ல விசே­ஷம்' திரைப்­ப­டம் விமர்­சன ரீதி­யாக நல்ல வர­வேற்­பைப் பெற்று வரு­கிறது. இப்­ப­டத்­தில் சத்­ய­ராஜ், ஊர்­வசி, ஷிவானி நாரா­ய­ணன் மற்­றும் பல­ரும் நடித்­துள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது அபர்ணா பால­மு­ரளி 'நித்­தம் ஒரு வானம்' படத்­தி­லும் நடி­கர் கார்த்­தி­யு­டன் ஒரு படத்­தி­லும் நடித்து வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!