'விக்ரம் வேதா' படத்தை இயக்கிய புஷ்கர் -காயத்ரி தற்பொழுது 'சுழல்' என்ற இணையத்தொடர் ஒன்றை இயக்கி வெளியிட்டு இருக்கின்றனர். அந்தத் தொடரைப் பார்த்த பிரபலங்கள் பலரும் இயக்குநர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி இயக்குநர்களான
புஷ்கர் - காயத்ரி கூறுகையில்,
"இந்தத் தொடர் ஆறு அத்தியாயங்
களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும்.
"இந்தியத் திரை உலகின்
முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும் தொடர் குறித்த விமர்சனங்களை வெளியிட்டதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
"அனைவரும் இதற்காக தங்களது நேரத்தைச் செலவிட்டு பார்த்து ரசித்ததுடன், அது தொடர்பான நேர்மறையான செய்திகளை சமூக வலைத்
தளத்தில் பதிவிட்டு எங்களை உற்சாகப்படுத்தி உள்ளார்கள். இது நாங்கள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று.
"இந்த நிகழ்வு ஒரு வாரம் கழித்து நடக்கும் என்று நினைத்து இருந்தோம். ஆனால், இந்த தொடர் வெளியான குறுகிய காலகட்டத்திற்குள் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
"எங்கள் திரைத் துறையிலிருந்து சக படைப்பாளிகள் மற்றும் நட்சத்திரங்கள் அளித்த வரவேற்பிற்காகவும் ஆதரவிற்காகவும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்," என்று நன்றி தெரிவித்தனர் இந்த தம்பதி.
இந்தத் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று இந்திய மொழிகளிலும் 30 வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
'சுழல்' இணையத் தொடரில் நடித்த கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி.
தெலுங்குத் திரையில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் கிரித்தி ஷெட்டி. இவர் நடித்து வெளி வர இருக்கும் 'தி வாரியர்' என்ற படத்தில் இடம் பெற்றுள்ள 'புல்லட்டு' என்ற பாடல் தற்பொழுது பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது. இவர் அண்மையில் அளித்த பேட்டியில், "நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். தகுந்த நேரம் வரும்போது அது நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

