திரைச்செய்திகள்

திரைச்செய்திகள்

2 mins read
b196c476-989d-471f-b252-8730c145c395
-
multi-img1 of 2

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' வழங்கவுள்ளது. இந்நிலையில் 'கார்கி' படக்குழுவுடன் சூர்யா, ஜோதிகா எடுத்த புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, "கார்கி' குழுவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திரைப்படத்தில் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புது சிந்தனைகளும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் 'கார்கி' பிடிக்கும் என்று நம்புகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய தம்பி எல்வினுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இவரின் தம்பி எல்வின் இந்தப் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் தற்பொழுது 'சந்திரமுகி 2', 'அதிகாரம்' மற்றும் 'ருத்ரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

'நயன்தாரா இந்திப் படத்தில் நடிக்கவில்லை. அவர் அந்தப் படத்தில் இருந்து வெளியாகிவிட்டார்,' என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இந்தி நடிகர் ஷாருக்கான். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது, "அட்லி இயக்கும் 'ஜவான்' படத்தில் என்னுடன் நயன்தாரா ஜி நடிக்கிறார்," என்று கூறினார் ஷாருக்கான். இதன் மூலம் 'ஜவான்' படத்தில் நயன்தாரா நடித்து வருவது உறுதியாகி உள்ளது. இந்தி திரைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகியுள்ளதால் ஷாருக்கான் நல்ல படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் அட்லி இயக்கும் 'ஜவான்' படமும் ஒன்று.