திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
5c5dbd0a-ebfb-46a2-a9ec-8ba2ad0ddeab
-
multi-img1 of 3

 கார்த்தி நடிப்பில் நடப்பாண்டில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அவற்றுள் இயக்குநர் சங்கர் மகள் அதிதியுடன் நடித்துள்ள 'விருமன்' படம் முதலில் வெளியாகிறது. அதன் பின்னர் 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' ஆகிய படங்கள் வெளியாகும். இந்நிலையில், ராஜு முருகன் அடுத்து இயக்க உள்ள படத்தில் கார்த்தி நாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்க இருப்பதாகத் தகவல். இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்படத்துக்கு 'ஜப்பான்' என பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்.

 'பென்குயின்', 'மிஸ் இந்தியா', 'குட்லக் சகி', 'சாணிக் காயிதம்' என கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து நடித்த படங்கள் வசூல் ரீதியில் பெரிதாகச் சாதிக்கவில்லை. இதையடுத்து தன் தந்தையும் மூத்த சகோதரியும் இணைந்து தயாரித்த 'வாஸி' மலையாளப் படத்தில் டோவினோ தாமசுடன் இணைந்து நடித்தார் கீர்த்தி. இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. வழக்கம்போல் இதிலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. ஆனால் வசூலில் படுத்துவிட்டதாம். தற்போது தமிழில் 'மாமன்னன்' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி. இதுதவிர தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'தசரா', சிரஞ்சீவியுடன் 'போலா சங்கர்' ஆகிய இரு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

 நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஏற்ற பெண்ணைத் தேடி வருகிறார்களாம் அவரது குடும்பத்தார். அவர் நடித்த படங்கள் வசூலில் சோடை போகவில்லை. தயாரிப்புத் தரப்புக்கு குறைந்தபட்ச லாபத்தையேனும் பெற்றுத் தந்ததாக கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கூறுகின்ற னர். தற்போது சசி இயக்கத் தில் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடிக்கிறார். இளன் இயக்கும் ஒரு படத்திலும் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். ஹரீஷ் வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கக்கூடும்.