வசூலில் அசத்துகிறது 'வீட்ல விசேஷம்'

வசூலில் அசத்துகிறது 'வீட்ல விசேஷம்'

1 mins read
ce46b4cf-bbf4-4fd2-92dc-b16c9dd9e8ed
'வீட்ல விசேஷம்' படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, சரவணன். -

'வீட்ல விசே­ஷம்' திரைப்­ப­டம் வசூ­லில் அசத்தி வரு­கிறது. இத­னால் அப்­ப­டக்­கு­ழு­வி­னர் உற்­சா­கத்­தில் மிதக்­கின்­ற­னர்.

கடந்த 17ஆம் தேதி வெளி­யீடு கண்­டது இப்­ப­டம். ஆர்ஜே பாலாஜி நாய­க­னாக நடித்­தி­ருப்­ப­து­டன் தனது நண்­பர் சர­வ­ணனு­டன் இணைந்து இப்­ப­டத்தை இயக்­கி­யும் உள்­ளார்.

இந்­தி­யில் வெளி­யான 'பதாய் ஹோ' படத்­தின் மறு­ப­திப்­பான இதை, போனி கபூர் தயா­ரித்­துள்­ளார். இந்­நி­லை­யில் இப்­ப­டத்­துக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இது­வரை பத்து கோடி ரூபாய் வசூ­லாகி உள்­ள­தா­கத் தக­வல். மேலும் சில தினங்­கள் திரை­யரங்­கு­களில் ஓட வாய்ப்­புள்­ள­தால் வசூல் மேலும் அதி­க­ரிக்­கும்.

படக்­கு­ழு­வி­னர் இவ்­வ­ளவு பெரிய வெற்­றியை எதிர்­பார்க்­க­வில்லை போலி­ருக்­கிறது. இந்த ஆச்­ச­ரி­யத்­து­ட­னேயே சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­தது 'வீட்ல விசே­ஷம்' படக்­குழு. ஊடகங்கள் தந்த ஆதரவால் படம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் என்று நம்பியதாகவும் அனைவரது ஆதரவுக்கும் நன்றி என்றும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தந்து வருகிறார்.