நடிகர் 'பூ' ராமு மாரடைப்பால் காலமானார். தெரு நாடகக் கலைஞரும் நல்ல எழுத்தாளரு மான ராமு, கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' படத்தில் நடித்தவர்.
இயக்குநர் சசியின் 'பூ' படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். எனவே 'பூ' ராமு என்று அழைக்கப்பட்டார்.
பின்னர், 'நண்பன்', 'சூரரைப் போற்று', 'கர்ணன்', 'நீர் பறவை' ஆகிய படங்களில் நடித்தார்.

