லிங்குசாமி இயக்கி உள்ள 'தி வாரியர்' தெலுங்குப் படத்தில் இடம்பெற்றுள்ள 'புல்லட்' பாடல் உலகம் முழுவதும் உள்ள இந்திய திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூலை 14ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதமே 'புல்லட்' பாடல் இணையத்தில் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர் சிம்புவும் ஹரிப்ரியாவும் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல் 'யூடியூப்'பில் தமிழில் 57 மில்லியன், தெலுங்கில் 73 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், இசையுடன் தொடர்புடைய பல்வேறு செயலிகள் மூலம் இந்தப் பாடல் உலகம் முழுவதும் இதுவரை 11 பில்லியன் முறை கேட்கப்பட்டுள்ளது.
11 பில்லியன் முறை கேட்கப்பட்ட பாடல்
1 mins read
-

