நடிகருக்கு இலங்கை அமைச்சர் பாராட்டு

நடிகருக்கு இலங்கை அமைச்சர் பாராட்டு

1 mins read
ca58f1b2-01e3-4a51-976c-88ec510748c7
-

இலங்கை மக்­க­ளுக்கு உதவ முன்­வந்த நகைச்­சுவை நடி­கர் பிளாக் பாண்­டிக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார் இலங்கை கடல் தொ­ழில் அமைச்­சர் டக்­ளஸ் தேவா­னந்தா.

உத­வும் மனி­தம் அமைப்­பின் மூலம் சாலை­யோ­ரம் வாழ்ந்து வரு­ப­வர்­க­ளுக்கு உண­வ­ளிப்­பது, ஏழைக் குழந்­தை­க­ளின் படிப்புச் செலவை ஏற்பது என உதவுகிறார்.

இந்­நி­லை­யில், இலங்கை மக்­களுக்கு தமது அமைப்­பின் மூலம் உதவ முன்­வந்­துள்ள அவர், நிவா­ர­ணப் பொருள்­க­ளை­ இலங்கை மக்­க­ளுக்கு நேர­டி­யாக வழங்க விரும்­புவதா­கக் குறிப்­பிட்டு அமைச்­சர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வுக்கு கடி­தம் எழுதி உள்­ளார். அதற்­குப் பதி­ல­ளித்­துள்ள அமைச்­சர், "நம்­பிக்­கை­யோடு பணி­களைத் தொடங்­க­லாம் என்றும் நீங்கள் அனுப்பும் பொருள் களை கப்பல் சேவை மூலம் கொண்டுவர நான் ஆவன செய் கிறேன்," என்றும் கூறியுள்ளார்.