மிரள வைக்க வருகிறான் 'ஓநாய் மனிதன்'

மிரள வைக்க வருகிறான் 'ஓநாய் மனிதன்'

2 mins read
8c2f5d7c-46bc-4e19-b7d4-e39d1c0936b1
'ஓநாய் மனிதனின் கதை' படத்தில் இடம்பெறும் காட்சியில் சாக்‌ஷி அகர்வால். -

சாக்‌ஷி அகர்­வால் நாய­கி­யாக நடிக்­கும் படம் 'ஓநாய் மனி­த­னின் கதை'. ரங்கா புவ­னேஸ்­வர் இயக்­கு­கி­றார்.

இது முழு நீள திகில் பட­மாக உரு­வா­கிறது.

இது­வரை நகைச்­சுவை கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து வந்த ஜாங்­கிரி மது­மிதா, இதில் குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்.

"இன்­றைய இளை­யர்­களும் பெரி­ய­வர்­களும் வித்­தி­யா­ச­மான திகில் படங்­க­ளுக்கு நல்ல ஆத­ரவு அளிக்­கின்­ற­னர். அது­போன்ற படங்­கள் தயா­ரிப்­பில் இருக்­கும்­போதே வியா­பா­ரம் ஆகின்­றன.

"எனி­னும், தர­மான படைப்­பு­களின் எண்­ணிக்கை குறை­வாக இருக்­கிறது என்­பது என் கருத்து," என்­கி­றார் ரங்கா புவ­னேஸ்­வர்.

ஓநாய் மனி­தன் எனும் கதைக்­களத்தை இந்­திய சினி­மா­வில் இது­வரை யாரும் தொட்­ட­தில்லை என்று குறிப்­பி­டும் அவர், கடந்த 1970களில் இந்­தி­யில் ஓரிரு படங்­கள் இதே போன்று உரு­வாகி உள்­ளன என்­றா­லும், அவை உல­கத்­த­ரத்­தில் இல்லை என்­கி­றார்.

"கார­ணம், அந்­நாள்­களில் திரைப்­ப­டங்­களில் நவீன தொழில்­நுட்­பங்­களை உட­னுக்­கு­டன் பயன்­படுத்­தும் போக்கு நில­வ­வில்லை. இது­போன்ற திகில் படங்­க­ளுக்கு 'கிரா­ஃபிக்ஸ்' தொழில்­நுட்­பம் மிக­வும் அவ­சி­யம். அதில் எந்­த­வி­தக் குறை­யும் ஏற்­பட்­டு­வி­டக் கூடாது என்­ப­தற்­கா­கவே சில முக்­கிய காட்­சி­களை ஹாங்­காங்­கில் வைத்து உரு­வாக்­கி­னோம்.

"ஓநாய் மனி­தன் என்ற கதா­பாத்­தி­ரத்தை சாதா­ர­ண­மாக திரை­யில் காட்­டி­னால் வர­வேற்பு இருக்­காது. அத­னால்­தான் மிக­வும் மெனக்­கெட்டு அந்த பாத்­தி­ரத்­தின் தோற்­றத்தை மிர­ள­வைக்­கும் வகை­யில் உரு­வாக்கி உள்­ளோம்.

"இந்­தப் படம் இந்தி திரை­யு­ல­கில் மட்­டு­மல்­லா­மல், உலக சினிமா சந்­தை­யி­லும் வியப்­பு­டன் பேசப்­படும். 45 நாள்­களில் மொத்த படப்­பி­டிப்­பை­யும் நடத்தி முடித்­துள்­ளோம். தொழில்­நுட்­பப் பணி­கள் முடி­வ­டைந்­த­தும் படம் திரை­காணும்," என்­கி­றார் இயக்குநர் ரங்கா புவனேஸ்வர்.

இந்தப் படத்துக்கு அன்வர் கான் தாரிக் இசையமைக்க, ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.