திரைத் துளிகள்

 இளம் நடிகைகள் பலர் சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்து வருகின்ற னர். அந்த வகையில் அழகு சாதன நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. அந்த நிறுவனத்தின் சிறப்புத் தூதராகவும் அவரே செயல்பட உள்ளார். அவரது இந்த புது முயற்சிக்கு இளம் நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது 'வாரிசு' படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இதற்காக வழக்கத்தைவிட அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.

 'புஷ்பா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதிலும் சமந்தா ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டால் நன்றாக இருக்கும் எனப் படக்குழுவினர் கருது கின்றனர். இது தொடர்பாக சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு பாடல்தான் என்றாலும், சமந்தாவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாகத் தகவல். எனினும் சமந்தா இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

அவரது குத்துப் பாடல் உட்பட இரண்டாம் பாகத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க உள்ளதாகத் தகவல்.

 ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினராக நடிகர் சூர்யா நியமிக்கப் பட்டுள்ளார். நடப்பாண்டுக் கான தேர்வுக்குழு உறுப்பினர்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. இம்முறை 397 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இந்தியா சார்பில் சூர்யா, இந்தி நடிகை கஜோல், இயக்குநர் ரீமா கக்டி ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து சூர்யாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வுக்குழுதான் ஆஸ்கர் விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும்.

 நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் - மீனா திருமணம் நடைபெற்றது. அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வித்யாசாகருக்கு, பின்னர் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். எனினும் நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வித்யாசாகர், மீனா தம்பதியர்க்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

 வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு மெட்டமைக்கும் பணி தொடங்கி உள்ளது. படத்தில் விஜய்க்கான அறிமுகப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத உள்ளார். இத்தகவலை படத்தின் இசையமைப்பாளர் தமன் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!