அடிதடியில் அசத்திய நாயகி

3 mins read
c876316c-4b44-4e2b-8be4-37688e2b116e
-

கொரோனா வேளை­யில் வேதிகா குறித்து ஒரு தக­வ­லும் இல்லை. ஒரு­வேளை தமி­ழில் இனி நடிப்­பதே இல்லை என முடிவு செய்­து­விட்­டாரா என்று ரசி­கர்­கள் சந்­தே­கப்­பட்ட நிலை­யில், பிர­பா­திஸ் சாம்ஸ் இயக்­கும் 'கஜானா' படத்­தின் மூலம் தனது இருப்பை உறு­தி­செய்­துள்­ளார் வேதிகா.

முதல்முறை­யாக இதில் அகழ்­வா­ராய்ச்­சி­யா­ளர் கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். அது மட்­டு­மல்ல, இவ­ருக்கு சில சண்­டைக் காட்­சி­களும் உள்­ள­ன­வாம்.

"வேதி­கா­தான் படத்­தின் நாயகி. நான் கதையை விவ­ரித்த போதே மிகுந்த ஆர்­வ­மாகி, எப்­போது படப்­பி­டிப்பு என்று கேட்­டார். அந்த ஆர்­வத்­துக்கு இணை­யாக படப்­பி­டிப்­பின்­போது மிகுந்த ஒத்­து­ழைப்­பும் கொடுத்­தார்.

"வேதி­காவை இத்­தனை நாள்­க­ளாக அவ­ரது நட­னத்­துக்­காக மட்­டுமே பாராட்டி வந்­தோம். அவ­ரது நடிப்பு எப்­போ­துமே சிறப்­பாக இருக்­கும் என்­பது தெரி­யும். உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­களில் அசத்­து­வார்.

"இந்­தப் படத்­தில் அதி­ரடி நாய­கி­யா­க­வும் அவர் அவ­தா­ரம் எடுத்­துள்­ளார். டூப் போடா­மல் சில சாக­சக் காட்­சி­களில் வேதிகா நடித்த விதத்­தைப் பார்த்து ஒட்டு­மொத்­த படக்­கு­ழு­வும் அசந்­து­போனது. இந்­தக் காட்­சி­கள் அவ­ருக்கு தனி ரசி­கர் கூட்­டத்தை உரு­வாக்­கும் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை. மேலும், படத்­துக்கு கூடு­தல் பலம்­சேர்க்­கும் வித­மாக இந்­தக் காட்­சி­கள் அமைந்­துள்­ளன," என்­கி­றார் இயக்­கு­நர் பிர­பா­திஸ் சாம்ஸ்.

'கஜானா' படத்­தில் சாந்­தி­னி­யும் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். ஒரு­வித வில்­லத்­த­னத்­து­டன் கூடிய கதா­பாத்­தி­ரம் என்­பதை மட்­டுமே இப்­போது சொல்லமுடி­யும் என்­றும் மற்ற அனைத்­தும் ரக­சி­யம் என்­றும் இயக்­கு­நர் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

"சாந்­தினி ஒரு பெரிய வெற்­றிக்­காக காத்­தி­ருக்­கி­றார். அதன்பிறகு அவ­ரால் மேலும் சில உய­ரங்­க­ளைத் தொட முடி­யும். அதே­போல், இனிகோ பிர­பா­க­ருக்கு இந்­தப் படம் புதிய அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தித் தரும். இவர்­களைத் தவிர யோகி பாபு, பிர­தாப் போத்­தன், மொட்டை ராஜேந்­தி­ரன், சென்ட்­ரா­யன் ஆகி­யோ­ரு­டன் ஹரிஷ் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரத்தை ஏற்றுள்­ளார்.

"இந்­தப் படத்­துக்கு முத­லில் 'வீரப்­ப­னின் கஜானா' என்று தலைப்பு வைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், சந்­த­னக் கடத்­தல் வீரப்­பன் குடும்­பத்­தார் இதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கவே, வெறும் 'கஜானா'வாக சுருக்­கி­விட்­ட­னர்.

தமி­ழில் சாகசங்­கள் நிறைந்த திரைப்­ப­டம் வெளி­யாகி நீண்ட கால­மா­கி­விட்­டது. அந்­தக் குறை­யைப் போக்­கும் வகை­யில், காட்­டில் உள்ள அனைத்து மிரு­கங்­க­ளை­யும் வைத்து ஒரு படத்தை உரு­வாக்கி இருக்­கி­றோம். பொது­வாக, இந்­திய காடு­களில் உள்ள அனைத்து விலங்­கு­களும் இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

"புலி, யானை, கரடி, குரங்கு என்று அனைத்து விலங்­கு­களும் உள்ள திரைப்­ப­டங்­களை நானும் ஒரு ரசி­க­னாக இருந்து பார்த்து ரசித்­தி­ருக்­கி­றேன். ஆனால், ஒரு யானையைப் பேயாக இது­வரை யாரும் காட்­டி­ய­தில்லை. நாங்­கள் அதைச் செய்­தி­ருக்­கி­றோம்.

"ஒரு வகை­யில் இந்­தக் கதை­யின் நாய­கன் என்று யானை­யைச் சொல்­ல­லாம். இந்­திய தேசத்­துக்கு என்று பெரு­மை­மிகு வர­லா­றும் பாரம்பரி­ய­மும் உள்­ளன. அதை மைய­மாக வைத்து எழு­திய கதை இது," என்­கி­றார் பிர­பா­திஸ் சாம்ஸ்.

விலங்­கு­கள் சம்­பந்­தப்­பட்ட படம் என்­றாலே பல­ருக்கு ஹாலி­வுட் படைப்­பு­கள்­தான் நினை­வுக்கு வரும் என்று குறிப்­பி­டு­ப­வர், அந்த படங்­க­ளுக்கு இணை­யாக தனது படம் உரு­வாகி வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

எனவே, தமிழ் சினி­மா­வில் இது முக்­கிய படைப்­பாக காலத்­துக்­கும் நிலைத்து நிற்­கும் என்­றும் நம்­பிக்கை தெரி­விக்­கி­றார்.

"இந்­தப் படத்­தில் இன்­னொரு விலங்­கை­யும் காண்­பிக்­கப் போகி­றோம். அது என்ன மாதி­ரி­யான விலங்கு, அது எப்­படி இருக்­கும் என்­பதை எல்லாம் இப்­போதே சொல்ல முடி­யாது. டைனோ­சர் மாதிரி என்­று­கூட வைத்துக்­கொள்­ள­லாம்.

"அந்த மிரு­கத்தை 5,000 ஆண்டு­க­ளுக்கு முன்பு நம்­மு­டைய மண்­ணில் வாழ்ந்த உயி­ரி­ன­மா­கக் காண்­பித்­துள்­ளோம். படம் பார்க்­கும்­போது அந்த விலங்­கு­டன் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­கள் ரசி­கர்­களை மிர­ள­வைக்­கும்," என்­கி­றார் பிர­பா­திஸ் சாம்ஸ்.

"இந்­தப் படத்­தில் இரண்டு ஒளிப்­பதி­வா­ளர்­கள் பணி­யாற்றி உள்­ள­னர். ஒரே சம­யத்­தில் மூன்று வெவ்­வேறு பகு­தி­களில் படப்­பி­டிப்பு நடை­பெற்­றது. விக்­ரம் இசை அமைத்­துள்­ளார். கபி­லன் பாடல்­களை எழு­தி­யுள்­ளார். பின்­னணி இசைக்கு சாம்.சி.எஸ். பொறுப்­பேற்­றுள்­ளார்.

"வனப்­ப­கு­தி­யில் படப்­பி­டிப்பு நடத்து­வது அவ்­வ­ளவு எளி­தான விஷ­ய­மல்ல. மற்ற இடங்­களில் 40 நாள்­களில் ஒரு படத்தை எடுக்க முடி­யும் என்­றால், வனப்­ப­கு­தி­யில் எடுக்­கும்­போது 80 நாள்­கள் ஆகும். எந்­த­வி­த­மான அடிப்­படை வச­தி­களும் இல்­லா­மல் கடு­மை­யாக உழைக்க வேண்­டி­யி­ருக்­கும்.

"எங்­கள் படக்­குழு உழைப்­பில் எந்­தக் குறை­யும் வைக்­க­வில்லை. எனவே, இனி ரசி­கர்­க­ளி­டம்­தான் எல்­லாம் இருக்­கிறது," என்­கி­றார் இயக்­கு­நர் பிர­பா­திஸ் சாம்ஸ்.

, :   