கதை விவாதத்தில் கலந்துகொண்ட ரஜினி

நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கத்­தில் ரஜினி நடிக்­கும் 'ஜெயி­லர்' படத்­தின் படப்­பி­டிப்பு அடுத்த மாதம் தொடங்­கு­கிறது. இந்­நி­லை­யில், படத்­தின் கதை விவா­தத்­தின்­போது நிகழ்ந்த சில சுவா­ர­சி­யங்­கள் குறித்து தெரி­ய­வந்­துள்­ளது.

படத்­தின் நாய­கி­யாக ஐஸ்­வர்யா ராய் நடிப்­பது உறு­தி­யா­கி­விட்டதாகத் தெரி­கிறது. அடுத்த மாதம் 10ஆம் தேதி படப்­பி­டிப்பு தொடங்­கும்­போது அவர் அதில் பங்­கேற்க மாட்­டார் என்­றும் மாத இறு­தி­யில் அவர் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­க­ளைப் பட­மாக்­கும்­போது படக்­கு­ழு­வு­டன் இணைந்து கொள்­வார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

'ஜெயி­லர்' படத்­துக்கு இயக்­கு­நர் கே.எஸ்.ரவி­கு­மார் திரைக்­கதை அமைப்­ப­தாக வெளி­யான தக­வல் உண்­மை­யல்­ல­வாம். ரஜி­னி­யி­டம் முழுக்­க­தை­யை­யும் விவ­ரித்த பின்­னர், ரவி­கு­மார், சுரேஷ் கிருஷ்ணா போன்ற அனு­பவ இயக்­கு­நர்­க­ளி­டம் விவா­தித்து மாற்­றங்­க­ளைச் செய்­ய­லாமா என்று நெல்­சன் கேட்­ட­போது, தேவை­யில்லை என்று ரஜினி கூறி­விட்­ட­தா­கத் தக­வல்.

"உங்­கள் திறமை மீது எனக்கு நம்­பிக்கை உள்­ளது. தயக்­கம் இல்­லா­மல் காட்­சி­களை உரு­வாக்­குங்­கள். நகைச்­சுவை மட்­டும் சற்று தூக்­க­லாக இருக்­கட்­டும்," என்று ரஜினி கூறி­ய­தைக் கேட்­ட­தும் நெல்­சன் உற்­சா­க­மா­கி­விட்­டா­ராம்.

தில்­லு­முல்லு உட்­பட தாம் நகைச்­சு­வை­யாக நடித்­துள்ள சில படங்­க­ளைப் பார்க்­கு­மா­றும் நெல்­ச­னி­டம் ரஜினி கூறி­யுள்­ளார்.

"உங்­க­ளு­டைய நகைச்­சுவை அணி­யில் உள்ள அனைத்து நடி­கர்­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்­ளுங்­கள். மற்ற கதா­பாத்­தி­ரங்­களில் யார் நடிக்கவேண்­டும் என்­ப­தை­யும் நீங்களே முடிவு செய்­யுங்­கள்," என்று கூறி­ய­போ­தி­லும், இரண்டு கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு மட்­டும் இரு நடி­கர்­க­ளின் பெயர்­க­ளைப் பரிந்­துரை செய்­தா­ராம்.

அவ்­வப்­போது நெல்­சன் தனது குழு­வி­ன­ரு­டன் கதை விவா­தத்­தில் ஈடு­பட்ட இடத்­துக்கு வருகை தந்த ரஜினி, ஓரிரு மணி நேரத்தை அக்­கு­ழு­வு­டன் செல­விட்­டுள்­ளார். அப்­போது தமது முந்­தைய படங்­க­ளின் படப்­பி­டிப்­பு­க­ளின்­போது நிகழ்ந்த சுவா­ர­சி­ய­மான விஷ­யங்­க­ளைப் பகி­ரந்து கொண்­டுள்­ளார்.

'ஜெயிலர்' படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஹைத­ரா­பாத்­தில் அரங்கு அமைத்து நடத்த உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!