திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
cda0560d-7810-48b3-9445-590fd7fb7c15
-
multi-img1 of 3

 தமது கணவரும் நடிகருமான ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் தம்முடன் இன்னும் நட்பு பாராட்டி வருவதாகக் கூறுகிறார் ஆலியா பட். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு நடிகைகள் கேத்ரீனா கைஃப், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் ரன்பீர் கபூரை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசியுள்ளார் ஆலியா பட். "எனது கணவரின் முன்னாள் காதலிகளுடன் எப்படி நட்புடன் இருப்பது என்று எனக்குத் தெரியும். அவர்கள் இருவரும் இன்றும் எனக்கு நல்ல தோழிகள். எனக்கு இருவரையும் பிடிக்கும்," என்று ஆலியா பட் தெரிவித்துள்ளார். எனினும், தமது கணவரது முன்னாள் காதலிகளின் பெயர்களை அவர் பேட்டியில் குறிப்பிடவில்லை. அவரது வெளிப்படையான போக்கை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

 நயன்தாரா நடிக்கும் 75வது படம் குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட் நிறுவனம் சார்பில் ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார். நயன்தாராவுக் காக மிக வித்தியாசமான கதைக்களத்தை அமைத்துள் ளார் 'ராம்' படத்தின் இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா. பட வேலைகள் தொடங்கியதுமே ஜெய், சத்யராஜ் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனராம். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம் இது.

 பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்துக்கு 'வணங்கான்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து படத் தலைப்பை அறிவித்துள்ளனர்.

மேலும், படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியும் வெளியாகி உள்ளது. அதில் தாடியுடனும் கண்களில் கோபத்துடனும் காட்சியளிக்கிறார் சூர்யா. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் 'வணங்கான்' முழு நீள அடிதடி படமாக இருக்கும் என்று கணித்துள்ளனர்.