தமிழ்த் திரையுலகின் பிரியாணி ரசிகைகள்

தமிழ்த் திரையுலகின் பிரியாணி ரசிகைகள்

1 mins read
e051b893-e2ff-4c42-af11-029fae087e90
காஜல் -

நடிகைகள் என்றாலே உணவுக் கட்டுப்பாடு குறித்துதான் அதிகம் பேசுவார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அவர்களில் சிலர், பிரியாணி என்றால் போதும், இந்தக் கட்டுப்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, சாப்பாட்டு மேசையில் தட்டுடன் அமர்ந்துவிடுவார்கள்.

அவர்களில் நயன்தாராவுக்குத் தான் முதலிடம். சீன, கடல் உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவார் என்றாலும், பிரியாணி என்று வந்துவிட்டால், மற்ற அனைத்தையும் ஒதுக்கி விடுவாராம்.

நடிகை ஜோதிகாவும் பிரியாணிப் பிரியர்தான். குறிப்பாக ஹைதராபாத் பிரியாணி என்றால் போதும். வயிறு நிரம்பும் வரை ஒரு பிடிபிடிப்பாராம். காஜல், பூஜா ஹெக்டே, தமன்னா என்று மேலும் பல நாயகிகள் பிரியாணி கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.