திரைத்துளிகள்

 பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார் நாயகி கிரித்தி ஷெட்டி. சிறு வயது முதல் சூர்யாவின் படங்களைப் பார்த்து வருவதால், தாம் அவரது தீவிர ரசிகை என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

"சூர்யாவுடன் நடிக்கிறேன் என்பது தெரிந்தது முதல் திரையுலக நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி பெருமையாக பல விஷயங்களைக் குறிப்பிட்டனர். தொழில்மீது மிகுந்த அர்ப்பணிப்பும் நண்பர்கள்மீது அக்கறையும் கொண்டவர் என்று தெரிவித்தனர். கதாநாயகன் என்பதால் இப்படிச் சொல்வது இயல்புதான் என்று நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பின்போதுதான் நண்பர்கள் கூறியதைவிட அவர் இருமடங்கு அன்பானவர், அக்கறையும் அர்ப்பணிப்பும் கொண்டவர் என்பதை உணர முடிந்தது," என்கிறார் கிரித்தி.

 இரட்டை இயக்குநர்கள் ஆன்டனி - ரூசோ இயக்கி உள்ள 'தி கிரே மேன்' படம் தனுஷுக்கு ஹாலிவுட்டுடன் உலகத்துக்கான கதவைத் திறந்துவிட்டுள்ளது. இந்நிலை யில், அந்தப் படத்தில் தாம் ஒப்பந்தமானது குறித்து சில விவரங்களை இவர் பகிர்ந்து கொண்டுள்ளார். "நான் எப்படி இந்தப் படத்தில் நடித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. திடீரென ஒருநாள் ஹாலிவுட் படங்களுக்குக் கலைஞர்களைத் தேர்வுசெய்யும் தனியார் நிறுவனம் என்னைத் தொடர்புகொண்டு, நடிக்கச் சம்மதமா என்று கேட்டதும் உடனே சம்மதித்துவிட்டேன். இந்தப் படத்தில் பணியாற்றியபோதுதான், சினிமாவில் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன என்பதை உணரந்தேன். கற்றுக்கொள்ள வாய்ப்புள்ள படங்களுக்காக நெடுநாள்கள் காத்திருந்தேன். அந்த அனுபவத்தையும் மனநிறைவையும் தந்த அருமையான படம் 'தி கிரே மேன்' விளங்குகிறது," என்றார் தனுஷ்.

 அனுஷ்காவுக்கும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இவர் பல கார்களை வைத்துள் ளார். அவற்றுள் மிகவும் பிடித்த மானது என்றால் 'பிஎம்டபிள்யூ 6 சீரிஸ்' கார்தான். அதன் விலை கிட்டத்தட்ட ரூ.75 லட்சம். கடந்த 2021ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்ட உடனேயே அந்த காரை இவர் வாங்கிவிட்டார். இது தவிர ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய எஸ்யூவி கார், ஆடி கியூ5 ரக கார், டொயோட்டா நிறுவனத்தின் கொரோல்லா வகை கார் என அனுஷ்காவின் வீட்டில் ஆறு கார்கள் இருப்பதாகத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!