திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

 தமது கள்ளிக்காட்டு இதிகாசம் நூல் தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் பேயத் தேவர் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்பாராத பல விருதுகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, ரஜினி நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்துக்காக ஹைதராபாத் திரைப்பட நகரில் சில கோடி ரூபாய் செலவிட்டு பிரம்மாண்டமான சிறைச்சாலை போன்ற அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

 தமக்கு எப்போதோ திருமணமாகிவிட்டதாகச் சொல்கிறார் ஹன்சிகா. 'மகா' திரைப்படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருப்பவர், ரசிகர் களுடன் இணையம் வழி கலந்துரையாடியபோது, திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டுவிட்ட நிலையில், ஹன்சிகாவின் திருமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த ஹன்சிகா, "நான் முன்பே திருமணம் செய்து கொண்டுவிட்டேன். அதாவது நடிப்புத் தொழிலை திருமணம் செய்துள்ளேன். எனது முழுக்கவனமும் அத்தொழில் மீதுதான் உள்ளது. திருமணம் குறித்து யோசிக்கவில்லை," என்றார்.

 ஆண்ட்ரியா நடித்துள்ள 'பிசாசு-2' படமும் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'விருமன்' படமும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியீடு காண உள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் உரு வாகி உள்ளது 'பிசாசு-2'. இயக்குநர் சங்கர் மகள் அதிதியுடன் 'விருமன்' படத்துக்காக ஜோடி சேர்ந்துள்ளார் கார்த்தி. அதனால் இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன. 'பிசாசு-2' படத்தின் மூலம் ஆண்ட்ரியாவுக்குப் பல விருதுகள் கிடைக்கும் என்கிறார் இயக்குநர் மிஷ்கின். இதற்கிடையே, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடித்த 'குருதி ஆட்டம்' ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

 கதாநாயகியை மையப்படுத்தும் கதை களாகத் தேர்வு செய்து வருகிறார் நடிகை டாப்சி. இந்திய கிரிக்கெட் அணி தலைவர் மிதாலி ராஜ் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ள 'சபாஷ் மிது' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து மூன்று படங்களைச் சொந்தமாக தயாரிக்க உள்ளார். இந்நிலையில், 'அவெஞ்சர்' கதாபாத்தி ரத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் டாப்சி. இதுகுறித்து அப்படக்குழுவினரிடமோ, மார்வெலிடமோ யாராவது தகவல் தெரிவித்தால் உதவியாக இருக்கும் என்றும் அவர் அண்மைய பேட்டி ஒன்றில் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.