யோகிபாபு: தயவு செய்து நாயகனைப் புறக்கணிக்காதீர்கள்

யோகி­பாபு நண்­பர்­க­ளை­யும் நட்பை­யும் போற்­றக்­கூ­டி­ய­வர் என்று பாராட்டு­கி­றார் நடி­கர் நிதின் சத்யா.

இவர் நாய­க­னாக நடித்­துள்ள 'தாதா' என்ற புதிய படம் விரைவில் திரை­காண உள்­ளது.

இந்­நி­லை­யில், அப்­ப­டத்­தின் சுவ­ரொட்டி சமூக ஊட­கங்­களில் அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்­டது. அதில் நிதின் சத்­யா­வைக் காண­வில்லை. யோகி­பாபு துப்­பாக்­கி­யால் சுடும் காட்சி மட்­டுமே இடம்­பெற்றுள்­ளது.

இதைக் கண்டு அதிர்ச்­சி­யா­கி­விட்­டா­ராம் யோகி­பாபு. உட­ன­டி­யாக தன் மன­தில் இருப்­பதை சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

"இந்­தப் படத்­தில் என் நண்­பர் நிதின் சத்­யா­தான் நாய­க­னாக நடித்­துள்­ளார். நான் நான்­கைந்து காட்­சி­களில் மட்­டுமே நடித்­துள்­ளேன். தய­வு­செய்து இது­போன்று விளம்­ப­ரம் செய்­யா­தீர்­கள், நன்றி," என்று குறிப்­பிட்­டுள்­ளார் யோகிபாபு.

ஏற்­கெ­னவே, தாம் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் மட்­டுமே நடித்த படத்­துக்கு, தனது படத்­து­டன் பெரி­தாக விளம்­ப­ரம் செய்­யப்­பட்­ட­போது, அது தவறு எனக் கண்­டித்­தி­ருந்­தார். ரசி­கர்­களை ஏமாற்­றும் வகை­யில் விளம்­ப­ரப்­ப­டுத்­தக் கூடாது என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இப்­போது கதா­நா­ய­க­னைப் புறக்­க­ணித்­து­விட்டு, தம்மை வைத்து படத்­துக்கு விளம்­ப­ரம் செய்­வது தவறு என்­றும் சுட்­டிக்­காட்டி உள்­ளார் யோகி­பாபு.

அவ­ரது இந்தச் செயல்­பாடு நடி­கர் நிதின் சத்­யாவை நெகிழ வைத்­துள்­ளது. யோகி­பா­பு­வைப்­ போல் ஒரு நண்­பர் கிடைப்­பது அரிது என்று அவர் கூறி­யுள்­ளார்.

"நண்­பனை விட்­டுக்கொடுக்­கா­மல், ரசி­கர்­க­ளை­யும் விட்­டுக்தராமல் செயல்­படும் பெரிய மனம் யோகிபாபு­வுக்­குத்­தான் உண்டு. அந்த மனம்­தான் அவ­ருக்கு ரசிகர்­கள் கூட்டத்தை உரு­வாக்கி உள்­ளது," என்று பாராட்­டி­யுள்­ளார் நிதின் சத்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!