'ஓடிடி'யில் 'வீட்ல விசேஷம்'

'ஓடிடி'யில் 'வீட்ல விசேஷம்'

1 mins read

'வீட்ல விசே­ஷம்' திரைப்­ப­டம் இன்று முதல் ஓடிடி தளத்­தில் ஒளி­ப­ரப்­பாக உள்­ளது.

ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்­துள்ள இந்­தப் படத்­தில் சத்­ய­ராஜ், ஊர்­வசி இருவரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருந்­த­னர். அபர்ணா பால­மு­ரளி நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

இந்­தி­யில் வெற்றி பெற்ற 'பதாய் ஹோ' படத்தை தமி­ழில் மறு­ப­திப்பு செய்­துள்­ள­னர். இந்­திப் பதிப்பு விமர்­ச­கர்­க­ளால் வெகு­வா­கப் பாராட்­டப்­பட்­டது. மறு­ப­திப்­பில் தமிழ் ரசி­கர்­க­ளுக்கு ஏற்ப சில மாற்­றங்­க­ளைச் செய்து, தன் நண்­பர் சர­வ­ண­னு­டன் இணைந்து இப்­ப­டத்தை இயக்­கி­யுள்­ளார் ஆர்.ஜே.பாலாஜி.

படம் நன்­றாக இருப்­ப­தால் தயா­ரிப்­புத் தரப்­புக்கு சில கோடி­க­ளுக்கு லாபம் கிடைத்­துள்­ள­தா­கத் தக­வல்

இந்­நி­லை­யில், ஜீ5 ஓடிடி தளத்­தில் இன்று முதல் வீட்ல விசே­ஷம் படத்­தைக் கண்டு ரசிக்க முடி­யும்.