நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

1 mins read
5cdd5b92-e4c8-4fd0-9c76-ed911169dbc8
பிரதாப் போத்தன் படம்: தமிழக ஊடகம் -

அழியாத கோலங்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதோடு மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.

மலையாளத்தில் பரதன் இயக்கிய ஆரவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் பிரதாப் போத்தன். அதன் பின் அழியாத கோலங்கள், இளமைக் கோலம், மூடுபனி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு 11 திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். அதில் சீவலப்பேரி பாண்டி, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், லக்கி மேன் ஆகிய திரைப்படங்கள் முக்கியமானவையாக இடம் பிடித்தன.

மீண்டும் ஒரு காதல் கதை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதாப் அந்த திரைப்படத்தில் தமக்கு ஜோடியாக நடித்த ராதிகாவை மணமுடித்தார். சில காலம் கழிட்து இருவருக்கு மணமுறிவு ஏற்பட்டது.

மூடுபனியில் வரும் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை நினைத்தாலே பிரதப் போத்தன் கையில் கித்தர் இசைக்கருவியுடன் இருக்கும் காட்சி இன்றும் நம் கண்ணில் நிழலாடும்.

தனக்கென ஒரு தனி பாணியை நடிப்பில் பின்பற்றிய பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் 69 வயதாகும் பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் உடல்நல குறைவு காரணமாக காலமானார். செய்தி: தமிழக ஊடகம்