திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
b1bfb2d8-4703-44b7-84f0-85ad35c775f9
-
multi-img1 of 2

 நடிகை கங்கனா ரணாவத் அடுத்து நடிக்கும் படத்துக்கு 'எமர்ஜென்சி' என்று தலைப்பு வைத்துள்ளனர். அதனால் எடுத்த எடுப்பிலேயே சர்ச்சை யும் தொடங்கிவிட்டது. காரணம் இந்தப் படத்தில் காலஞ்சென்ற பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கங்கனா. இந்திரா காந்தி காலத்தில்தான் இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. "நான் நடித்து இயக்கும் 'எமர்ஜென்சி' படத்தில், உலக வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த, சர்ச்சைக்குரிய பெண்களில் ஒருவரைப் பற்றி இந்தப் படத்தில் பதிவு செய்யயப்போகிறோம்," என்று சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார் கங்கனா.

 அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில் நயன்தாராதான் நாயகி என்பது தெரிந்த விஷயம்தான். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடிக்கிறார் என்பது புதுத்தகவல். அதிலும், சம்பளம் வாங்காமல் நடிக்க உள்ளார். அட்லி, ஷாரூக்கான் ஆகிய இருவருடனான நட்புக் காக இப்படத்தில் நடிக்க சம்ம தித்துள்ளாராம் விஜய். இப்படத் தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும் ஷாரூக் கான் இரட்டை வேடங்களிலும் நடிக்க உள்ளனர். விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை செப்டம்பரில் படமாக்க உள்ளனர்.