'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் நடித்த தனுஷ் பெற்ற சம்பளம் நான்கு கோடி ரூபாய்தானாம்.
தமிழ் படங்களில் நடிக்க அவர் சுமார் 15 கோடி ரூபாய் வரை பெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு வலுவான கதாபாத்திரம் அமையும் என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவு குறைந்த தொகைக்கு அவர் நடித்ததாக கூறப்படுகிறது.
தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேரடிப் படமாக உருவாகி வருகிறது.

