'அதை நினைத்தாலே அழுதுவிடுவேன்'

'அதை நினைத்தாலே அழுதுவிடுவேன்'

1 mins read
45115973-6dc0-4402-9e63-fbc674debb55
'ஜெய் பீம்' படப்பிடிப்பில் சூர்யா, லிஜோ மோல். -

"செங்­கே­ணியை நினைத்­தால் இப்­போ­தும் என்­னை­யும் அறி­யா­மல் கண்­களில் நீர் வழி­யும்," என்­கி­றார் லிஜோ மோல்.

`ஜெய்­பீம்' படத்­தைப் பார்த்­த­வர்­க­ளால் அதில் இடம்­பெற்­றி­ருந்த செங்­கேணி கதா­பாத்­தி­ரத்தை அவ்­வ­ளவு எளி­தில் மறந்­து­விட இய­லாது. மலை­யாள நடி­கை­யான லிஜோ மோல் அவ்­வ­ளவு இயல்­பாக நடித்­தி­ருந்­தார்.

"படம் வெளி­யீடு கண்ட பிற­கும்­கூட என்­னால் செங்­கேணி காபாத்­தி­ரத்தை விட்டு வெளியே வர முடி­ய­வில்லை. அந்­தப் படத்துக்­காக இரு­ளர் சமூக மக்­க­ளு­டன் பல நாள்­கள் நெருங்­கிப் பழ­கி­னேன். அவ்­வ­ளவு ஏன், அவர்­களில் ஒரு­வ­ரா­கவே வாழ்ந்­தேன் என்­ப­து­தான் சரி.

"செங்­கே­ணியை நினைக்­கும்­போது உடனே கண்­ணீர் பெருக்­கெ­டுக்­கும். வீட்­டில் தனி­யாக இருக்­கும்­போது கதறி அழு­த­தும் உண்டு.

"கடந்த சில தினங்­க­ளா­கத்­தான் இந்த உணர்­வு­பூர்­வ­மான தாக்­கத்­தில் இருந்து மெல்ல வெளியே வந்து கொண்­டி­ருக்­கி­றேன். அடுத்­த­டுத்த படங்­களில் நடிக்­கும்­போது அழுகை நிற்­கும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் லிஜோ மோல்.

இவ­ருக்கு அண்­மை­யில்­தான் திரு­ம­ணம் நடந்­துள்­ளது. கண­வர் அருண் நல்ல நண்­பரைப் போல் இனி­மை­யா­கப் பழகு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"என் கண­வ­ரும் விரை­வில் ஒரு படத்தை இயக்­கு­வார். அதற்­கான கதை தயா­ராகி வரு­கிறது. இரு­வ­ரும் நண்­பர்­க­ளைப் போல் பழ­கு­வ­தால் வாழ்க்கை இனிக்­கிறது," என்­கி­றார் லிஜோ மோல்.

தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.