'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தமக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என நடிகை ஓவியா எதிர்பார்த்தார்.
ஆனால் ஒன்றிரண்டு வாய்ப்பு கள் தேடி வந்தனவே தவிர, உருப்படியான படங்கள் ஏதும் அமையவில்லை. இதையடுத்து தொலைக்காட்சி 'ரியாலிட்டி' நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகப் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே, தெலுங்கு படம் ஒன்றில் வில்லியாக நடிக்கக் கேட்டு இவரை அணுகி உள்ளனர். அப்படத்துக்காக பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டுள்ளாராம்.

